88 அரியவகை உயிரினங்கள் மீட்பு 2 கடத்தல்காரர்கள் சிக்கினர்
தானேயில் 88 அரியவகை பறவைகள், விலங்கினங்களை வனத்துறையினர் மீட்டனர். இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
தானே,
தானேயில் அரியவகை உயிரினங்களை ஆசாமிகள் கடத்தி விற்பனை நடத்தி வருவதாக வனத்துறை அதிகாரி நரேந்திர முத்தேவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் வனத்துறையினர் நேற்றுமுன்தினம் விவைனா வணிக வளாகம் அருகே ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
அப்போது 2 பேர் கூண்டில் அடைக்கப்பட்ட நிலையில் 2 கிளிகளை கொண்டு சென்றதை கண்டனர். உடனே அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்களின் வீடுகளுக்கு வனத்துறையினர் அழைத்து சென்று சோதனை நடத்தினர்.
அங்கு ஏராளமான அரியவகை பறவைகள் மற்றும் விலங்கினங்கள் அடைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த 88 பறவைகள், உயிரினங்களை மீட்டனர். இதில் 27 ரோஜா கிளிகள், 8 கொண்டை கிளிகள், 3 அலெக்ஸ்சாண்டர் கிளிகள், 16 இந்திய ஆமைகள், 24 கரும்புள்ளிகள் கொண்ட ஆமைகள், 10 காட்டு அணில்கள் போன்றவை அடங்கும்.
இது குறித்து வனத்துறையினர் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். அரியவகை பறவைகள், விலங்கினங்களை எங்கிருந்து கடத்தி கொண்டு வந்தனர் என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story