பழமை வாய்ந்த பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன: சின்னாற்று கரையோர கிராமங்களில் அகழாய்வு மேற்கொள்ள வேண்டும்


பழமை வாய்ந்த பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன: சின்னாற்று கரையோர கிராமங்களில் அகழாய்வு மேற்கொள்ள வேண்டும்
x
தினத்தந்தி 31 Oct 2020 11:40 PM GMT (Updated: 31 Oct 2020 11:40 PM GMT)

பழமை வாய்ந்த பொருட்கள் கண்டறியப்பட்டுள்ள சின்னாற்று கரையோர கிராமங்களில் அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என்று தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மங்களமேடு, 

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா வேப்பூர் அருகே உள்ள கல்லை, ஓலைப்பாடி மற்றும் சாத்தநத்தம் கிராமங்களில் வயல்வெளிகளிலும், ஏரிக்கரைகளிலும் சங்கினால் ஆன அணிகலன் கள், பானை ஓடுகள், பாசிமணிகள் உள்ளிட்ட பொருட்கள் நிலப்பரப்பின் மேலேயே கிடைத்துள்ளன. அந்த பொருட்கள் மிகவும் பழமை வாய்ந்தவை ஆகும். இது போன்ற பொருட்களை சாத்தநத்தம் கிராமத்தை சேர்ந்த ரத்தினவேல் சேகரித்து, அவரது வீட்டில் வைத்துள் ளார்.

மேலும் இப்பகுதியில் காணப்படும் கருங்கல்பாறைகளில் பல்லாங்குழி போன்ற பள்ளங்கள் இருப்பதும், அந்த கற்பாறைகளில் கோடுகள் இருப்பது குறித்தும் கருத்து தெரிவித்த தொல்லியல் ஆய்வாளர்கள், அந்த சான்றுகள் சங்க காலத்தை சேர்ந்ததாக இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர்.

அகழாய்வு மேற்கொள்ள வேண்டும்

மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் கற்காலம் தொட்டே மனித இனம் வாழ்ந்ததற்கான ஆதாரங்களாக கற்கருவிகள் கிடைத்துள்ள பகுதி ஓலைப்பாடி என்றும், சங்க கால மனித நாகரிகத்திற்கு ஆதாரமான முதுமக்கள் தாழிகள் மற்றும் பானைகள் கிடைத்துள்ளதை குறிப்பிட்ட ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக பச்சை மலையில் உற்பத்தியாகி ஓடுகின்ற சின்னாற்று கரையோரங்களில் 2 ஆயிரம் வருடத்திற்கு முந்தைய மனித நாகரிக தடயங்கள் உள்ளது என்றும் கூறுகின்றனர். வேப்பூர் பகுதியில் உள்ள மேற்கண்ட கிராமங்கள் சின்னாறு எனப்படும் காட்டாற்றின் கரையோரம் உள்ளதால், பல நூற்றாண்டு பழமையான மனித நாகரிக எச்சங்கள் புதையுண்டு இருக்கக்கூடும் என்று தெரிவிக்கும் தொல்லியல் ஆர்வலர்கள், காவிரி, வைகை, நொய்யல் போன்ற பெரிய ஆற்றங்கரையோர அகழாய்வு போல் சின்னாற்றங்கரை ஓரங்களில் உள்ள அது போன்ற கிராமங்களிலும் அகழாய்வு மேற்கொண்டால், தமிழர்களின் நாகரிக அடையாளங்களை அறிய முடியும் என்பதால் மத்திய, மாநில அரசுகள் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story