பெரம்பலூரில் காங்கிரஸ் கட்சியினர் மறியல் 27 பேர் கைது


பெரம்பலூரில் காங்கிரஸ் கட்சியினர் மறியல் 27 பேர் கைது
x
தினத்தந்தி 1 Nov 2020 5:27 AM IST (Updated: 1 Nov 2020 5:27 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் தர்ணா போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் சாலை மறிய லில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 27 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர், 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண்மை சட்ட திருத்தத்தை எதிர்த்து பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பாக அறவழிப் போராட்டமாக தர்ணா போராட்டத்தை நேற்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடத்துவதற்காக பெரம் பலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலை முன்பு கட்சியினர் சார்பில் சாமி யானா பந்தல் அமைக்கப்பட் டிருந்தது. இதைத்தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடு வதற்காக பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் வக்கீல் தங்க.தமிழ்ச்செல்வன் தலைமையில், கட்சியினர் சாமியானா பந்தல் அருகே நேற்று காலை கூடினர்.

ஆனால் சாமியானா பந்தல் அமைத்து தர்ணா போராட் டத்தில் ஈடுபடுவதற்கு காங் கிரஸ் கட்சியினருக்கு பெரம் பலூர் போலீசார் அனுமதி மறுத்தனர். இதைத் தொ டர்ந்து சாமியானா பந்தலை போலீசார் அகற்றிய போது, காங்கிரஸ் கட்சியின ருக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட் டது.

27 பேர் கைது

இதையடுத்து போலீசாரை கண்டித்து காங்கிரஸ் கட்சி யினர் திடீரென்று சாலையில் அமர்ந்து மறியல் போராட் டத்தில் ஈடுபட்ட தால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. மறியலை கைவிடவில்லை யென்றால் கைது செய்யப் படுவீர்கள் என்று போலீசார் எச்சரிக் கை செய்தும், காங் கிரஸ் கட்சி யினர் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 21 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி, அருகே உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்ததை கண்டித்து, பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு பெண் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து அதே மண்ட பத்தில் தங்க வைத்தனர். கைது செய்யப்பட்ட அனை வரையும் போலீசார் மாலை யில் விடுவித்தனர்.

கே.எஸ்.அழகிரி கண்டனம்

அரியலூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருச்சியில் இருந்து கார் மூலம் பெரம்பலூர் வழியாக வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மண்ட பத்தில் கைது செய்யப்பட்டு தங்க வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சியினரை சந்தித்து பேசினார். அப் போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், பெரம்பலூரில் காங்கிரஸ் கட்சியினரின் தர்ணா போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்து, அவர்களை கைது செய் திருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க. அரசும், மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசும் ஜனநாயகத் திற்கு புறம்பாக செயல்படுகிறது. பேச்சுரிமை, எழுத்துரிமை, போராடுகின்ற உரிமை இந்திய ஜனநாயகத்திற்கு உண்டு. எனவே அந்த உரிமை கூட மறுக்கப்படு கிறது என்பது, ஜனநாயகத் தை மெல்ல மெல்ல கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப் படுகிறது என்பதற்கு சமமானது. எனவே அந்த உரிமைகளை தர வேண்டும். எதிர்ப்பு குரலும், விமர்சன மும் தான் ஜனநாயகத் ணீதினுடைய உயிர்நாடி. இவைகளுக்கு எதிராக ஒரு அரசு செயல்படுகிறது என்றால், ஜனநாயக மாண்பு மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்று அர்த்தம். அதனை தமிழக காங்கிரஸ் கடுமையாக கண்டிக்கிறது, என்றார். 

Next Story