தாளவாடியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 16 பேர் கைது


தாளவாடியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 16 பேர் கைது
x
தினத்தந்தி 1 Nov 2020 11:08 AM IST (Updated: 1 Nov 2020 11:08 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி தாளவாடி பஸ் நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தாளவாடி வடக்கு ஒன்றியம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தாளவாடி, 

மனுநீதி நூலை தடை செய்ய வேண்டும், தொல். திருமாவளவன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யவேண்டும், கவுந்தப்பாடியில் தொல்.திருமாவளவன் கார் மீது கல் வீசிய பாரதீய ஜனதா கட்சியினரை கைது செய்யவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தாளவாடி பஸ் நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தாளவாடி வடக்கு ஒன்றியம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை.

எனினும் தடையை மீறி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடக்கு ஒன்றிய செயலாளர் பசவண்ணா தலைமையில் அந்த கட்சியை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 16 பேரை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் அங்குள்ள சமுதாயக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Next Story