ஆத்தூரில் கிழக்கு மாவட்ட காங்கிரசார் போராட்டம்


ஆத்தூரில் கிழக்கு மாவட்ட காங்கிரசார் போராட்டம்
x
தினத்தந்தி 1 Nov 2020 4:00 PM IST (Updated: 1 Nov 2020 3:53 PM IST)
t-max-icont-min-icon

ஆத்தூரில் மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிழக்கு மாவட்ட காங்கிரசார் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

சேலம், 

சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 6-ந் தேதி முதல் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள், விவசாயிகள் என 20 ஆயிரம் பேரிடம் கையெழுத்துகள் பெறப்பட்டன. 

இந்தநிலையில் நேற்று ஆத்தூர் மணிக்கூண்டு அருகே காங்கிரசார் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே.அர்த்தனாரி தலைமை தாங்கினார். மாவட்ட பார்வையாளர் நாமக்கல் சித்திக் கலந்து கொண்டு பேசினார். இதில் மாவட்ட பொருளாளர் ஒசுமணி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் அணைஅரசு, முன்னாள் தலைவர்கள் சக்கரவர்த்தி, வெங்கடாச்சலம், தர்மராஜ், மாவட்ட முன்னாள் தலைவர் பெரியசாமி, ஆத்தூர் நகர தலைவர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச்செயலாளர் மூடுதுறை கனகராஜ், துணை தலைவர்கள் கணேசன், தங்கராஜ், ஒன்றிய கவுன்சிலர் சாந்தி ராஜேந்திரன், பொது செயலாளர் பாஸ்கர், நரசிங்கபுரம் நகர தலைவர் ஜோதிபாசு, ஆத்தூர் குமார், ஆட்டையாம்பட்டி சாமி, இளைஞர் காங்கிரஸ் தலைவர் அருளானந்தம், மகிளா காங்கிரஸ் தலைவி மகாலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சர்தார் வல்லபாய் படேலின் 145-வது பிறந்த நாள், இந்திரா காந்தியின் நினைவு நாளும் கடைபிடிக்கப்பட்டது.

Next Story