குற்றங்களை தடுக்க போலீசார் விழிப்புணர்வு அணிவகுப்பு
திருப்பத்தூர் மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க பொதுமக்கள் உஷாராக இருக்க போலீசார் விழிப்புணர்வு அணிவகுப்பு நடத்தினர்.
ஜோலார்பேட்டை,
திருப்பத்தூர் மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க பொதுமக்கள் உஷாராக இருக்க போலீசார் விழிப்புணர்வு அணிவகுப்பு நடத்த சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் ஜோலார்பேட்டை போலீசார் சார்பில் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து தலைமையில் 30 போலீசார் விழிப்புணர்வு அணி வகுப்பு நடத்தினர். சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் முன்னிலை வகித்தார்.
ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் தொடங்கிய அணிவகுப்பு காவல் நிலைய வீதி, சந்தைக்கோடியூர், மேட்டுசக்கரகுப்பம் வழியாக ஆஞ்சநேயர் கோவில் வரை சென்று முக்கிய வீதிகளில் வழியாக மீண்டும் போலீஸ் நிலையத்தை வந்தடைந்தது.
Related Tags :
Next Story