மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா


மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 1 Nov 2020 5:02 PM IST (Updated: 1 Nov 2020 5:02 PM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை 2 லட்சத்து 78 ஆயிரத்து 576 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16,298 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

15 ஆயிரத்து 26 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 5,291 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. ஒரு முகாமில் 2 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் 91 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் நேற்று மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மடத்துப்பட்டி, மலைப்பட்டியில் 2 பேர், ரெட்டியப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளை சேர்ந்த 17 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,315 ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவ பரிசோதனை வெகுவாக குறைந்து வரும் நிலையில் நேற்று முன்தினம் 7,042 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் 5,291 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. மாவட்ட நிர்வாகம் அருப்புக்கோட்டை சிதம்பராபுரத்தை மட்டுமே கட்டுப்பாட்டு பகுதியாக அறிவித்துள்ளது. ஆனால் மலைப்பட்டி, பாலையம்பட்டி ஆகிய பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில் அந்த பகுதிகளை மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கவில்லை.

விதிமுறைப்படி பாதிப்பு ஏற்பட்ட கிராம பகுதிகளை கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்க வேண்டிய நிலையில் அந்த விதிமுறை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

நோய் பாதிப்பு குறைந்து வரும் நிலையிலும், பண்டிகை காலம் நெருங்கி வருவதாலும் மாவட்ட நிர்வாகம் தடுப்பு நடவடிக்கை எடுப்பதில் முன் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம் ஆகும்.

Next Story