கம்பத்தில் கோவில், கடையில் திருடியவர் கைது


கம்பத்தில் கோவில், கடையில் திருடியவர் கைது
x
தினத்தந்தி 1 Nov 2020 8:45 PM IST (Updated: 1 Nov 2020 8:39 PM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் கோவில் மற்றும் கடைகளில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து செய்தனர்.

கம்பம்,

கம்பத்தில் காமயகவுண்டன்பட்டி செல்லும் சாலையில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலின் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடு போனது. அதே நாளில் கம்பத்தில் குமுளி மெயின் ரோட்டில் உள்ள கண்ணாடி கடை, மளிகைகடை, எலக்ட்ரிக்கல் கடை, ரெடிமேடு துணிகடை என 4 கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதில் கண்ணாடி கடையில் மட்டும் ரூ.5 ஆயிரம் திருடுபோனது.

இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் சிலைமணி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் திவான்மைதீன் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு அவர்கள் திருட்டு நடந்த கண்ணாடி கடை அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இதில் கம்பம் வள்ளுவர் தெருவை சேர்ந்த ஹரீஸ்குமார் (வயது 19) என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் கோவில் உண்டியல் மற்றும் கண்ணாடிகடையில் பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். கைதான ஹரீஸ்குமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கம்பத்தில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்றதாக, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் மீண்டும் திருட்டில் ஈடுபட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story