ராஜ்யோத்சவா தின கொண்டாட்டத்தின் போது கொரோனா விதிகளை மீறிய கன்னட அமைப்பினர் மீது போலீஸ் தடியடி பெலகாவியில் பரபரப்பு
பெலகாவியில், கன்னட ராஜ்யோத்சவா தின கொண்டாட்டத்தின்போது கன்னட அமைப்பினர் கொரோனா தடுப்பு விதிகளை மீறினர். இதனால் அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெலகாவி,
கர்நாடகம் உதயமான நவம்பர் 1-ந் தேதி ஆண்டுதோறும் ராஜ்யோத்சவா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கொரோனா பரவலால் ராஜ்யோத்சவா தினத்தை கொண்டாட ஒவ்வொரு மாவட்டத்திலும் 100 பேருக்கு மட்டுமே அரசு அனுமதி அளித்து இருந்தது. இந்த நிலையில் ராஜ்யோத்சவா தினத்தை முன்னிட்டு கர்நாடகம்-மராட்டியம் மாநில எல்லைப்பகுதியில் அமைந்து உள்ள பெலகாவி மாவட்டத்தில் நேற்று காலை முதலே கொண்டாட்டங்கள் களைகட்டின.
கன்னட கொடியை ஏந்தியபடி பெலகாவி நகர் முழுவதும் கன்னட அமைப்பினர் ஊர்வலமாக சென்றனர். ஆட்டம், பாட்டம் என பெலகாவியில் ராஜ்யோத்சவா தினம் களைகட்டியது. கன்னட அமைப்பினர் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக சென்றனர். அப்போது ‘புவனேஸ்வரி தாய்க்கு ஜே, கர்நாடகாவுக்கு ஜே,‘ என்று வாழ்த்து கோஷங்களை எழுப்பினர்.
மேலும் நகரில் உள்ள ராணி சென்னம்மா சர்க்கிள், கல்லூரி சாலை, மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் அலங்கரிக்கப்பட்டன. ராணி சென்னம்மா சர்க்கிள் சிலைக்கு மாவட்ட பொறுப்பு மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிலையில் நேற்று மதியம் ராணி சென்னம்மா சர்க்கிள் அருகே கன்னட அமைப்பினர், கன்னட கொடியை கையில் வைத்து கொண்டு சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும், கொரோனா தடுப்பு விதிகளை கடைப்பிடிக்காமலும் நின்று கொண்டு இருந்தனர். மேலும் அங்கு பட்டாசுகளும் வெடித்தனர்.
அப்போது அங்கு வந்த போலீசார், கொரோனா தடுப்பு விதிகளை கடைப்பிடிக்கும்படி கன்னட அமைப்பினரிடம் கூறினர். ஆனால் அவர்கள் அதனை ஏற்க மறுத்து விட்டனர். இதனால் கன்னட அமைப்பினர் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இதையடுத்து அங்கு பரபரப்பு உண்டானது.
இந்த நிலையில் பெலகாவி தங்களுக்கு சொந்தமானது என்று பெலகாவியில் வசித்து வரும் மராட்டியர்கள் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். ஆனால் பெலகாவியை விட்டு கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று கர்நாடகம் கூறி வருகிறது. இதனால் ஆண்டுதோறும் கன்னட ராஜ்யோத்சவா தினத்தையொட்டி, பெலகாவியில் வசிக்கும் கன்னடர்கள் ராஜ்யோத்சவா தினத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு ராஜ்யோத்சவா தினத்தையொட்டி கருப்பு தினம் அனுசரிக்க போவதாக மராட்டியர்கள் அறிவித்து இருந்தனர். இந்த நிலையில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்காத வண்ணம் தடுக்க பெலகாவி மாவட்டத்தில் கருப்பு தினம் கொண்டாட கலெக்டர் ஹிரேமட் தடை விதித்து இருந்தார். ஆனால் அதையும் மீறி நேற்று பெலகாவியில் மராட்டியர்கள் கருப்பு சட்டைகளை அணிந்து கருப்பு தினத்தை கடைப்பிடித்தனர். மேலும் கருப்பு நிற பலூன்களை வானில் பறக்க விடவும் முயற்சி செய்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.
இதுபோல நிப்பானி, பீதர், பால்கி ஆகிய பகுதிகளில் வசித்த வரும் மராட்டியர்களும், ராஜ்யோத்சவா தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு நாளை கடைப்பிடித்தனர். இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்காத வண்ணம் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

Related Tags :
Next Story