கர்நாடக மராத்தியர்களுக்கு ஆதரவாக கருப்பு பேட்ஜ் அணிந்த மராட்டிய மந்திரிகள்
கர்நாடகாவில் வசிக்கும் மராத்தியர்களுக்கு ஆதரவாக மராட்டிய மந்திரிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து இருந்தனர்.
மும்பை,
கர்நாடக மாநிலம் பெல்காம் பகுதியில் அதிகளவில் மராட்டியர்கள் வசித்து வருகின்றனர். பெல்காம் பம்பாய் பிரசிடென்சியின் கீழ் இருந்ததாக மராட்டியம் உரிமைகோரி வருகிறது.
பெல்காம் பிரச்சினை தற்போது சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதேபோல கர்நாடக தினமான நவம்பர் 1-ந் தேதியை பெல்காமில் வாழும் மராத்தியர்கள் கருப்பு தினமாக கடைபிடித்து வருகின்றனர்.
நேற்று அந்த மக்களுக்கு ஆதரவாக மராட்டிய மாநிலத்தில் உள்ள மந்திரிகளும் கருப்பு பேட்ஜ் அணிந்து இருந்தனர். மாநில நீர்வளத்துறை மந்திரி ஜெயந்த் பாட்டீல் தனது கையில் கருப்பு பேட்ஜ் அணிந்து இருந்தார். மேலும் அவர், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ள போதும், கர்நாடகாவில் வாழும் மராத்தியர்கள் மீது வன்முறைகள் அரங்கேற்றப்படுவதாக கூறினார்.
மேலும் அவர் பெல்காம் மற்றும் மராத்தியர்கள் அதிகம் உள்ள எல்லை பகுதிகள் மராட்டியத்துடன் இணைக் கப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இதேபோல நகா்புற மேம்பாட்டு துறை மந்திரி ஏக்நாத் ஷிண்டே தானேயில் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு கர்நாடக எல்லையில் வசிக்கும் மராட்டிய மக்களின் போராட்டத்துக்கு தனது ஆதரவை தெரிவித்தார். மந்திரிகள் ஏக்நாத் ஷிண்டே மற்றும் சகன் புஜ்பால் ஆகியோர் கர்நாடகாவில் வசிக்கும் மராத்திய மக்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் பெல்காம், கார்வர், நிபானி, பிடார் மற்றும் மராத்தி பேசும் மக்கள் அதிகம் உள்ள இடங்களில் கல்வி, சமூக நீதி, மராத்தி மொழி பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு அரசு தீர்வு காணும் என கூறியுள்ளனர்.
இதேபோல சஞ்சய் ராவுத் எம்.பி., மந்திரிகள் சாடேஜ் பாட்டீல், ஹசன் முஸ்ரிப் ஆகியோரும் கர்நாடகாவில் வாழும் மராத்திய மக்களுக்கு ஆதரவாக பேசி உள்ளனர்.

Related Tags :
Next Story