மராத்தியர்கள் அதிகம் வசிக்கும் கர்நாடக பகுதிகள் மராட்டியத்துடன் இணைக்கப்படும் - ஜெயந்த் பாட்டீல் நம்பிக்கை


மராத்தியர்கள் அதிகம் வசிக்கும் கர்நாடக பகுதிகள் மராட்டியத்துடன் இணைக்கப்படும் - ஜெயந்த் பாட்டீல் நம்பிக்கை
x
தினத்தந்தி 2 Nov 2020 4:30 AM IST (Updated: 2 Nov 2020 3:20 AM IST)
t-max-icont-min-icon

மராத்தியர்கள் அதிகம் வசிக்கும் கா்நாடக பகுதிகள் மராட்டியத்துடன் இணைக்கப்படும் என மந்திரி ஜெயந்த் பாட்டீல் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

மும்பை,

கர்நாடக மாநிலத்தின் எல்லை பகுதிகளில் வசிக்கும் மராத்தியர்கள், தங்கள் பகுதியை மராட்டியத்துடன் இணைக்க வேண்டும் என நீண்ட காலமாக போராடி வருகின்றனர். இந்தநிலையில் ஒன்றிணைந்த மராட்டியத்திற்காக நவம்பர் 1-ந் தேதியை கருப்பு தினமாக கடைபிடிக்க மராட்டிய அரசு முடிவு செய்தது.

இதேபோல எல்லை பகுதிகளில் வசிக்கும் மராத்தியர்களுக்கு ஆதரவாக, மந்திரிகள் மற்றும் தேசியவாத கட்சியினர் கருப்பு ரிப்பன் அணிந்து இருப்பார்கள் என மந்திரி ஜெயந்த் பாட்டீல் கூறியிருந்தார்.

இந்தநிலையில் அவர் நேற்று கர்நாடக எல்லையில் உள்ள மராத்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள், மராட்டியத்துடன் இணைக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-

மராத்திய சகோதரர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இன்று தேசியவாத காங்கிரஸ் கருப்பு தினத்தை கடைபிடித்து உள்ளது. அதற்கு அடையாளமாக கருப்பு ரிப்பன் அணிந்து உள்ளோம். கர்நாடக எல்லையில் வசிக்கும் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி, வன்முறை, ஒடுக்குமுறைகளுக்கு எதிராக தேசியவாத காங்கிரஸ் மட்டுமின்றி மந்திரிகளும் போராடி வருகின்றனர். எல்லை பகுதியில் சிக்கியிருக்கும் மக்களுக்கு ஆதரவாக மராத்திய மக்கள் முழு பலத்துடன் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story