புதுச்சேரி விடுதலைநாள் விழா மாநிலத்தின் தனித்தன்மையை பாதுகாக்க உயிர் தியாகம் செய்யவும் தயார் நாராயணசாமி ஆவேச பேச்சு
புதுவையின் தனித்தன்மையை பாது காக்க உயிர்த்தியாகம் செய்யவும் தயார் என்று விடுதலை நாள் உரையில் முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறினார்
புதுச்சேரி,
புதுச்சேரி விடுதலை நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி விழா நடைபெறும் கடற்கரை காந்தி திடலுக்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி 8.59 மணிக்கு வந்தார். அவரை செய்தி மற்றும் விளம்பரத்துறை செயலாளர் சுந்தரேசன், போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா ஆகியோர் வரவேற்றனர்.
தொடர்ந்து விழா மேடைக்கு வந்த முதல்- அமைச்சர் நாராயணசாமி தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தினார். அப்போது போலீஸ் பேண்டு வாத்தியக்குழுவினர் தேசிய கீதம் இசைத்தனர்.
அதன்பின் முதல்-அமைச்சர் நாராயணசாமி போலீஸ் அணிவகுப்பினை பார்வையிட்டார். தொடர்ந்து போலீஸ், ஊர்க்காவல்படை, தீயணைப்பு படையினரின் அணிவகுப்பு நடந்தது. அவர்களின் அணிவகுப்பு மரியாதையை முதல்-அமைச்சர் நாராயணசாமி ஏற்றுக்கொண்டார்.
அதன்பின் விழாமேடைக்கு திரும்பிய அவர் விடுதலை நாள் உரையை வாசித்தார்.
முதல்-அமைச்சர் நாரா யணசாமி தனது உரையில் கூறியதாவது:-
விடுதலை பெற்ற நாளில் இருந்து புதுவை மாநிலம் பல்வேறு நிலைகளில் வளர்ச்சி பெற்றிருந்தாலும் கடந்த ஆண்டுகளில் சின்னஞ்சிறு மாநிலங்களுக்கு முன்னோடியாகவும், பெரிய மாநிலங்களுக்கு இணையாகவும் வளர்ந்திருப்பது நமக்கு பெருமை சேர்க்கும் ஒன்றாகும். மத்திய அரசின் அனைத்து துறைகளும் அடங்கிய தரவரிசை பட்டியலில் யூனியன் பிரதேசங்களுக்கு இடையே புதுச்சேரி முதலிடம் பெற்றுள்ளது. நீதி, சட்டம் ஒழுங்கு, சுகாதாரம் மனிதவளம் ஆகியவற்றில் முதலிடம் பெற்றுள்ளது. தரமான கல்வி, பசி போக்கும் நடவடிக்கைகளில் யூனியன் பிரதேசங்களுக்கு இடையே நாம் 2-வது இடத்தை பெற்றுள்ளோம்
மாநில அரசின் இலவச அரிசி வழங்கும் திட்டத்தின்கீழ் அனைத்து வறுமைகோட்டிற்குகீழ் உள்ளவர்களின் ரேஷன்கார்டுகளுக்கும் 20 கிலோ அரிசிக்கான பணமும், மற்றவர்களுக்கு 10 கிலோ அரிசிக்கான பணமும் மாதந்தோறும் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கத்தினால் அனைத்து தரப்பு மக்களும் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். முழு ஊரடங்கு, தொழில்கள் முடக்கம், வேலைபாதிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் மாநில வருவாய் குறைந்ததுடன் கடுமையான நிதித்தட்டுப்பாட்டையும் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் நாம் உள்ளோம்.
வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப மின்னணு முறையில் கல்வி கற்றல் மற்றும் கற்பித்தலை அனைத்து பள்ளிகளிலும் அரசு மேம்படுத்தி வருகிறது. உயர்கல்வியில் ஏழை மாணவர்களும் ஏற்றம்பெற வேண்டும் என்பதற்காக புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. புதுவை பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடப்பிரிவிலும் புதுவையை சேர்ந்தவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று பல்கலைக்கழகத்துக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. புதுவை என்ஜினீயரிங் கல்லூரி தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் காரணமாக மாணவர்களின் கல்வியில் எந்த தேக்கமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக இணையதளம் மூலமாகவும், யூ.டியூப் மற்றும் தனியார் கேபிள் டி.வி. மூலமாகவும் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை போக்கிக்கொள்ள பெற்றோர் ஒப்புதலுடன் உரிய பாதுகாப்பு விதிகளை பின்பற்றி பள்ளிகள் திறக்கப்பட்டு அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாரதாம்பாள் நகரில் கேலோ இந்தியா திட்டத்தின்கீழ் ரூ.5 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்திலான நீச்சல் குளம் கட்டி முடிக்கப்பட்டு விரைவில் திறக்கப்பட உள்ளது. அரசு வேலைவாய்ப்பில் மாற்று திறனாளிகள் 4 சதவீத இடஒதுக்கீடு பெறவும், உயர்கல்வி ஒதுக்கீட்டில் 5 சதவீதம் பெறவும், உயர்நீதிமன்ற பதவிகளுக்காக 4 சதவீத இடஒதுக்கீடு பெறவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் பொதுப்பணித்துறை சார்பில் சாலை மேம்பாடு, குடிநீர் வழங்கல் மற்றும் பல்வேறு பயன்பாட்டிற்கான கட்டிட பணிகள் உள்ளிட்ட 128 பணிகள் சுமார் ரூ.451 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ளன. அதேபோல் 85 பணிகள் சுமார் ரூ. 511 கோடி செலவில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்னும் 76 புதிய பணிகள் சுமார் ரூ.710 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளன.
விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி-காரைக்கால் வழியாக நாகப்பட்டினம் வரையிலான 4 வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் ஆர்ஜிதம் செய்யும் பணிகள் நிறைவடைந்து அதற்கான பணிகளை நெடுஞ்சாலைத் துறையினர் தொடங்கியுள்ளனர். விழுப்புரம்-புதுச்சேரி 4 வழிச்சாலை திட்டத்துக்கு மத்திய மந்திரி நிதின்கட்காரி ஒப்புதல் அளித்துள்ளார். இத்திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. அரியூர் முதல் இந்திராகாந்தி சதுக்கம் வரை சாலை அகலப்படுத்தப்பட உள்ளது. ராஜீவ்காந்தி சதுக்கம் அருகில் ஒரு மேம்பாலமும், இந்திராகாந்தி சதுக்கம் அருகில் ஒரு மேம்பாலம் அமைக்கவும் மத்திய மந்திரி ஒப்புதல் அளித்துள்ளார். அதேபோல் சுண்ணாம்பாறு நடைபாதை திட்டம், காரைக்காலில் சாலை அகலப்படுத்தும் திட்டம், மாகி பகுதியில் புறவழிச்சாலை திட்டம் என பல திட்டங்களுக்கு மத்திய மந்திரி நிதின்கட்காரி ஒப்புதல் அளித்துள்ளார்.
திருக்காஞ்சி-சங்கராபரணி ஆற்றின் குறுக்கே ரூ.31 கோடி செலவில் நபார்டு வங்கி மூலம் கடன்பெற்று நடைபெற்று வரும் பாலம் அமைக்கும் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது. காமராஜர் மணிமண்டப பணிகள் ஜனவரி மாதத்திற்குள் முடிந்து திறக்கப்பட உள்ளது. அதேபோல் உப்பனாறு பணிகளும் விரைவில் முடிக்கப்பட்டு திறக்கப்பட உள்ளது.
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் பழைய சிறை வளாகம், பழைய துறைமுகம், ரிச்மண்ட் வீதி, நேருவீதி-ஆம்பூர் சாலை சந்திப்பு, ஆம்பூர் சாலை-ரங்கப்பிள்ளை வீதி சந்திப்பு, ரெயில் நிலையம், தாவரவியல் பூங்கா எதிரில் உள்ள காலியிடம், ரோடியர் மைதானம், அவ்வை திடல் மற்றும் மணிமேகலை பள்ளி ஆகிய 10 இடங்களில் ரூ.15 கோடி செலவில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க பூர்வாங்க திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. சிவாஜி சிலை முதல் மரப்பாலம் சந்திப்பு வரையில் சுமார் 6 கிலோமீட்டர் நீள சாலையில் இயற்கை வனப்பு திட்டம் ரூ.1.68 கோடி செலவில் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
புதிய துறைமுக பகுதியில் 34 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பாண்டி மெரினா கடற்கரையில் சுமார் ரூ.8 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா நோக்கில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் ஒரு பகுதியாக சுமார் 5 ஏக்கர் பரப்பில் கைவினை பொருட்கள் பூங்கா அமைய உள்ளது. மழைக்காலங்களில் நீர் தேங்கும் நிலையை தவிர்க்கும் பொருட்டு 9 பிரதான வாய்க்கால்களில் மழைநீர் வாய்க்கால் மேம்படுத்தும் பணிகள், பள்ள வாய்க்கால், மேட்டு வாய்க்கால், உழந்தை உபரி வாய்க்கால், கருவடிக்குப்பம், பாவாணர் நகர், கிருஷ்ணாநகர், வானவில் நகர், காமராஜர் சாலை முதல் வாணரப்பேட்டையில் உள்ள உப்பார் வாய்க்கால் 3 ரெயில்வே கல்வர்ட் ஆகிய இடங்களில் கால்வாய் அமைக்கும் பணிகள் சுமார் ரூ.62 கோடி செலவில் மேற்கொள்ளப்பட உள்ளன.
நெருக்கடி-சவால்
நாட்டின் பிற பகுதிகளைப்போலவே நமது புதுச்சேரி யூனியன் பிரதேசமும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு நெருக்கடிகளையும், சவால்களையும் எதிர்கொண்டு வருகிறது. இருந்தபோதிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்களின் ஏகோபித்த ஒத்துழைப்பு மற்றும் ஆதரவோடு கொரோனா பரவல் விரைவில் கட்டுக்குள் வரும் என்று நம்புகிறேன்.
புதுவை மாநிலம் அமைதியான மாநிலம் என்பதை நிலைநிறுத்தும் வகையில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. குற்றங்கள் நடைபெறும் விழுக்காடு பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதால் சாலை விபத்துகளும் பெருமளவில் குறைந்துள்ளது.
பயன்கருதாத பலரது தியாகத்தால் நமக்கு இந்த விடுதலை கிடைத்துள்ளது. விடுதலையின் பயன்கள் அனைவருக்கும் சென்றுசேர வேண்டும் என்பது அத்தியாக தலைவர்களின் கனவு. அதை நிறைவேற்றி தருவது எங்களது கடமை. எத்தகைய இடையூறுகள் வந்தாலும் அதையெல்லாம் முறியடித்து மக்கள் சுதந்திரமாக, பாதுகாப்பாக, வளமாக, நலமாக வாழ்வதற்கான சூழ்நிலைகளை உருவாக்கி கொடுப்பதை கடமையாக ஏற்று நாங்கள் செயல்பட்டு வருகிறோம். புதுவையின் தனித்தன்மையை பாதுகாக்க உயிர்த்தியாகம் செய்யவும் தயாராக உள்ளோம். இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

Related Tags :
Next Story