தமிழ்நாடு நாள் விழா சுவரொட்டிகள் ஒட்டிய தமிழர் தேசிய முன்னணி நிர்வாகிகள் 2 பேர் கைது
மன்னார்குடியில் தமிழ்நாடு நாள் விழா சுவரொட்டி ஒட்டிய தமிழர் தேசிய முன்னணி நிர்வாகிகள் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மன்னார்குடி,
தமிழ்நாடு அமைந்த தினமான நவம்பர் 1-ந் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடபடுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் நேற்று தமிழ் அமைப்புகள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் என பல்வேறு அமைப்பினர் தமிழ்நாடு திருநாள் கொண்டாட உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தமிழ்நாடு நாளை கொண்டாட முயன்ற தமிழ் அமைப்பினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழர் தேசிய முன்னணி கட்சி சார்பில் தமிழ்நாடு நாளை வரவேற்றும், தமிழ்நாடு எல்லை அமைய போராடியவர்களுக்கு வீரவணக்கம் தெரிவித்தும் மன்னார்குடி நகர பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.
கைது
மேலும் துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரங்களை பறிமுதல் செய்த மன்னார்குடி போலீசார் சுவரொட்டி ஒட்டிய தமிழர் தேசிய முன்னணி மாவட்ட செயலாளர் ஹரிஹரன், மற்றும் மாவட்ட துணைத்தலைவர் தேவா ஆகிய இருவரையும் கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதைத்தொடர்ந்து தமிழர் தேசிய முன்னணி மாநில பொது செயலாளர் டாக்டர் பாரதிசெல்வன் தலைமையில் நிர்வாகிகள் போலீஸ் நிலையம் முன்பு கூடினர். இதைத்தொடர்ந்து
கைது செய்யப்பட்ட இருவரும் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story