சிரா, ஆர்.ஆர்.நகர் தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல்: காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடக்கம்-கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு
கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள ஆர்.ஆர்.நகர், சிரா தொகுதிகள் இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இதில் கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபையில் சிரா, ஆர்.ஆர்.நகர் ஆகிய இரு தொகுதிகள் காலியாக உள்ளன. அதாவது ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த சத்யநாராயணா எம்.எல்.ஏ. (சிரா தொகுதி) கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். காங்கிரசை சேர்ந்த முனிரத்னா (ராஜராஜேஸ்வரிநகர்) ஒரு ஆண்டுக்கு முன்பு தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து கர்நாடக சட்டசபையில் காலியான சிரா, ராஜராஜேஸ்வரிநகர் (ஆர்.ஆர்.நகர்) ஆகிய 2 தொகுதிகளுக்கும் 3-ந் தேதி (அதாவது இன்று) நடைபெறும் என்று கடந்த அக்டோபர் மாதம் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி இன்று இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த சட்டசபை இடைத்தேர்தல் களத்தில் 40 வேட்பாளர்கள் உள்ளனர். இதில் முக்கியமாக சிரா தொகுதியில் ஆளும் பா.ஜனதா சார்பில் ராஜேஸ்கவுடா, காங்கிரஸ் சார்பில் டி.பி.ஜெயச்சந்திரா, ஜனதா தளம்(எஸ்) சார்பில் அம்மஜம்மா ஆகியோர் உள்பட 17 வேட்பாளர்களும், ஆர்.ஆர்.நகரில் பா.ஜனதா சார்பில் முனிரத்னா, காங்கிரஸ் சார்பில் குசுமா, ஜனதா தளம்(எஸ்) சார்பில் கிருஷ்ணமூர்த்தி உள்பட 23 பேரும் களத்தில் உள்ளனர். இதில் 6 பேர் பெண்கள் ஆவார்கள்.
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வந்தனர். கொரோனா பீதியையும் பொருட்படுத்தாமல் முன்னாள் பிரதமர் தேவேகவுடா, முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர்களை ஆதரித்தும், முதல்-மந்திரி எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்கள் பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர்கள் டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட தலைவர்கள் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்தும் வாக்கு சேகரித்தனர்.
இந்த இடைத்தேர்தலுக்கான பகிரங்க பிரசாரம் நேற்று முன்தினம் ஓய்ந்தது. இந்த நிலையில் சட்டசபை இடைத்தேர்தல் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இந்த 2 தொகுதிகளிலும் மொத்தம் 6 லட்சத்து 77 ஆயிரத்து 926 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 3 லட்சத்து 51 ஆயிரத்து 330 பேரும், பெண் வாக்காளர்கள் 3 லட்சத்து 26 ஆயிரத்து 107 பேரும், பிற வாக்காளர்கள் 89 பேரும் உள்ளனர்.
வாக்காளர்களின் வசதிக்காக மொத்தம் 1,008 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் சிராவில் 330 வாக்குச்சாவடிகளும், ஆர்.ஆர்.நகரில் 678 வாக்குச்சாவடிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. தேர்தல் பணியில் ஈடுபடுகிறவர்களுக்கு மின்னணு வாக்கு எந்திரங்கள் நேற்று வழங்கப்பட்டன. அவர்கள் அதை எடுத்துக் கொண்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு புறப்பட்டு சென்றனர். ஆர்.ஆர்.நகர் தொகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். அதே போல் சிரா தொகுதியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மேலும் தேர்தலை அமைதியாக நடத்தும் வகையில் இரு தொகுதிகளிலும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுளுளது.
இடைத்தேர்தலையொட்டி சிரா மற்றும் ஆர்.ஆர்.நகரில் இன்று அரசு விடுமுறையை அரசு அறிவித்துள்ளது. அதே நேரத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது என்று அரசு தெரிவித்துள்ளது. மேலும் தனியார் நிறுவனங்களும் தனது ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறையை வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களின் இடது கை நடுவிரலில் அழியாத மை வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல் கொரோனா பரவல் காரணமாக வாக்குச்சாவடிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. மேலும் கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்கவும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை ஒரு மணி நேரம் கொரோனா பாதித்த வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்கலாம் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அவர்களை வீடு அல்லது ஆஸ்பத்திரியில் இருந்து வாக்குச்சாவடிக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வாகன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற 10-ந் தேதி எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படுகிறது. இந்த இடைத்தேர்தல் முடிவு எப்படி வந்தாலும், மாநில அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்போவது இல்லை.
அதே நேரத்தில் தேர்தல் முடிவு அரசியல் கட்சிகளுக்கு கவுரவ பிரச்சினையாக இருக்கும். அதனால் ஆளும் பா.ஜனதா, இடைத்தேர்தலில் வெற்றி பெற தீவிரமான முயற்சியை மேற்கொண்டுள்ளது. காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் வசம் உள்ள அந்த 2 தொகுதிகளையும் கைப்பற்ற பா.ஜனதா தீவிர முனைப்புடன் பணியாற்றி இருக்கிறது.

Related Tags :
Next Story