நகைக்கடையில் ஏமாந்தவர்களை மீண்டும் ஏமாற்றிய ‘பலே’ பெண் லட்சக்கணக்கில் பணம் வசூலித்து மோசடி
நகைக்கடையில் பணம் கட்டி ஏமாந்தவர்களை மீண்டும் ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக புதுச்சேரி பெண் மீது போலீசில் புகார்கள் குவிகின்றன.
புதுச்சேரி,
கோவை பகுதியில் உள்ள ஜூவல்லரி ஒன்றில் தமிழகம், புதுவையை சேர்ந்த சேர்ந்த சிலர் பணம் செலுத்தி ஏமாந்துள்ளனர். அதில் புதுவையை சேர்ந்த பெண்ணும் ஒருவர்.
இந்த மோசடியில் தாங்கள் செலுத்திய பணத்தை திருப்பி தரக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் கோவையில் தொடர் போராட்டங்களை நடத்தியுள்ளனர். அப்போது புதுவையை சேர்ந்த அந்த பெண்ணும் கலந்துகொண்டுள்ளார். அப்போது பாதிக்கப்பட்ட சேலம், திருச்சி பகுதியை சேர்ந்த சிலருடன் அந்த பெண்ணுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது.
இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் புதுவை கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் முக்கிய பிரமுகர்களை நன்கு தெரியும் என்பதால் அவர்கள் மூலம் பணத்தை திருப்பி பெற்றுத்தர முயற்சி எடுக்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்ப வைப்பதற்காக முக்கிய பிரமுகர்களுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட படத்தை அவர் காட்டியுள்ளார்.
இதை உண்மை என்று நம்பிய அவர்களுக்கு அந்த பெண் மீது நம்பிக்கை பிறந்தது. இதைத்தொடர்ந்து அவர்களது நட்பு வளர்ந்தது. அவர்களது செல்போன் எண்களை பெற்று வாட்ஸ் அப் குரூப் ஒன்றையும் அந்த பெண் தொடங்கியுள்ளார்.
இதற்கிடையே ஏமாந்தவர்கள் அனைவரும் இணைந்து தொழில் தொடங்கி அதிகம் சம்பாதிக்கலாம். அதாவது புதுவையில் ஜவுளிக்கடை, அழகுநிலையம் தொடங்கலாம் அதற்காக பணம் கொடுங்கள். ரூ.1 லட்சம் தந்தால் மாதந்தோறும் லாபமாக ரூ.5 ஆயிரம் தருவதாக கூறி அந்த பெண் நாடகமாடினார்.
அவரது பேச்சை உண்மை என்று நம்பிய அவர்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரூ.16 லட்சம் பணத்தை கொடுத்தனர். அந்த பணத்துக்கு கடந்த ஜனவரி மாதம் வரை லாபமாக தலா ரூ.5 ஆயிரம் வீதம் வங்கியில் செலுத்தியுள்ளார்.
அதன்பின் அந்த பணம் எதுவும் கொடுக்கவில்லை. இதுபற்றி சம்பந்தப்பட்டவர்கள் அவரிடம் கேட்டதற்கு சரியான பதிலும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த சேலம் மேட்டூர் தங்கமாபுரிபட்டினத்தை சேர்ந்த இன்பத்தமிழ் மற்றும் அருள்குமார், யாஸ்மின், முத்துமாரி உள்ளிட்டவர்கள் புதுவை வந்து கவர்னர் மாளிகை, கலெக்டர் அலுவலகம், சி.பி.சி.ஐ.டி. போலீஸ், உருளையன்பேட்டை காவல்நிலையம் போன்றவற்றில் புகார் அளித்தனர்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர். அடுத்தடுத்த விசாரணையில் தான் மோசடி பெண்ணின் சுயரூபம் மேலும் அம்பலத்துக்கு வரும் என்று தெரிகிறது.

Related Tags :
Next Story