செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 136 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 136 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் 136 பேர் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 44 ஆயிரத்து 136 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 42 ஆயிரத்து 465 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
நேற்று ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 684 ஆக உயர்ந்தது. 987 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 113 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 38 ஆயிரத்து 232 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 36 ஆயிரத்து 692 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 917 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 623 பேர் கொரானா தொற்றால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 3 பேர் இறந்துள்ளார்கள்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 90 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 ஆயிரத்து 783 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 24 ஆயிரத்து 970 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
நேற்று சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 395 ஆக உயர்ந்தது. 418 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story