உடையார்பாளையம் பகுதியில் உள்ள கடைகளில் 195 கிலோ காலாவதி உணவு, புகையிலை, பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
உடையார்பாளையம் பகுதியில் உள்ள கடைகளில் மொத்தம் 195 கிலோ காலாவதியான உணவு பொருட்கள், தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் பிளாஸ்டிக் பொருட் கள் பறிமுதல் செய்யப்பட்டன.
உடையார்பாளையம்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா உத்தரவின்பேரில் உடையார்பாளையம் பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகள் மற்றும் மளிகை கடைகளில் நேற்று உணவு பாதுகாப்பு துறையின் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது காலாவதியான உணவு பொருட்கள், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு மொத்தம் ரூ.10 ஆயிரம் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ் டிக் பைகள் விற்பனை செய்த கடைகளுக்கு மொத்தம் ரூ.14 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களில் இருந்து 3 சட்டம் சார்ந்த உணவு மாதிரிகள் ஆய்விற்காக எடுக்கப்பட்டது.
பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைப்பு
இந்த ஆய்வின்போது 195 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், புகையிலை பொருட்கள் மற்றும் காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, உடையார்பாளையம் பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். இந்த ஆய்வில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மருத்துவர் நடராஜன் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சசிகுமார், பொன்ராஜ், ஜஸ்டின், அமல்ராஜ் ஆகியோர் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story