அதிக மின் கட்டண விவகாரத்தில் தீபாவளி பரிசாக நல்ல முடிவு கிடைக்கும் - மின்சார மந்திரி தகவல்


அதிக மின் கட்டண விவகாரத்தில் தீபாவளி பரிசாக நல்ல முடிவு கிடைக்கும் - மின்சார மந்திரி தகவல்
x
தினத்தந்தி 4 Nov 2020 4:00 AM IST (Updated: 4 Nov 2020 5:21 AM IST)
t-max-icont-min-icon

அதிக மின் கட்டண விவகாரத்தில், தீபாவளி பரிசாக நல்ல முடிவு கிடைக்கும் என மின்சார துறை மந்திரி நிதின் ராவுத் கூறினார்.

மும்பை,

மும்பையில் கடந்த 12-ந் தேதி மிகப்பெரிய அளவில் ஏற்பட்ட மின்தடையால் பெருநகரமே முடங்கியது. மின்தடைக்கு டாடா நிறுவனம் தான் காரணம் என குற்றம்சாட்டப்பட்டது. இந்தநிலையில் மாநில மின் துறை மந்திரி நிதின் ராவுத் டாடா மின் உற்பத்தி பகுதியை பார்வையிட்டார். அப்போது அவரிடம், ஊரடங்கு காலத்தில் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் அதிக மின் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார் அளித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் இந்த பிரச்சினை தொடர்பாக நிதித்துறைக்கு 7 முறை கடிதம் எழுதப்பட்டதாக கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது:-

அதிக மின் கட்டண விவகாரம் தொடர்பான மனு கடந்த ஞாயிறு இரவு நிதித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அந்த கோப்புகளை தற்போது கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ள நிதிதுறை மந்திரி அஜித்பவார் பார்த்திருப்பாரா என்பது தெரியவில்லை. அதிக மின் கட்டண விவகாரத்தில் தீபாவளி பரிசாக நல்ல முடிவு கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல அவர் வரும் காலத்தில் மின்தடை பிரச்சினையை தவிா்க்க மின் உற்பத்தியை அதிகரிக்குமாறு டாடா நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.

Next Story