தன்னுடன் வர மறுத்ததால், சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை, காதலியின் கணவருக்கு அனுப்பிய வாலிபர் கைது
தன்னுடன் வர மறுத்ததால் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை காதலியின் கணவருக்கு அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்,
நாகை வெளிப்பாளையம் பகுதியை சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கும், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அந்த பெண் திருமணத்துக்கு முன்பே நாகையை சேர்ந்த வசந்த் (வயது 28) என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகைக்கு வந்த அந்த பெண்ணை வசந்த் பார்த்துள்ளார். அப்போது தன்னுடன் வருமாறு வற்புறுத்தி உள்ளார். இதற்கு அந்த பெண் மறுத்து உள்ளார்.
வாலிபர் கைது
இதனால் ஆத்திரம் அடைந்த வசந்த், காதலித்தபோது அந்த பெண்ணுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பெண்ணின் கணவரின் செல்போனுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.
இதுகுறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து வசந்தை கைது செய்தனர்.
Related Tags :
Next Story