மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து இஸ்திரி தொழில் செய்து அசத்தும் பட்டதாரி


மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து இஸ்திரி தொழில் செய்து அசத்தும் பட்டதாரி
x
தினத்தந்தி 4 Nov 2020 8:24 PM IST (Updated: 4 Nov 2020 8:24 PM IST)
t-max-icont-min-icon

கீழக்கரையைச் சேர்ந்த இளைஞர் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து இஸ்திரி தொழில் செய்து அசத்தும் பட்டதாரி.

கீழக்கரை,

கீழக்கரையைச் சேர்ந்த இளைஞர் சேகு சதக் இப்ராஹிம் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துவிட்டு வளைகுடாவில் விமான நிலையத்தில் பொறியாளராக பணியாற்றினார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் கீழக்கரை திரும்பினார். இவர் தற்போது ஆடைகளை இஸ்திரி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்த தொழிலை தேர்வு செய்ததற்கான காரணம் குறித்து அவர் கூறியதாவது:-

துபாய் விமான நிலையத்தில் வேலை பார்த்தேன். கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் அங்குள்ள பணியாளர்களை குறைத்து விட்டனர். இதன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன் ஊர் திரும்பி விட்டேன். அதன் பின்னர் ஏதேனும் தொழில் தொடங்க ஆர்வமாக இருந்தேன். பல்வேறு தொழில்களை தேர்வு செய்து இறுதியில் ஆடைகளை இஸ்திரி செய்யக்கூடிய கடையை திறந்து உள்ளேன். தற்போது பெரும்பாலான மக்கள் விலை உயர்ந்த ஆடைகளை அணிகின்றனர். கடந்த காலங்களை போல் ஆடைகளை கரி பெட்டியின் மூலம் இஸ்திரி செய்ய முடியாது. இதைத் தொடர்ந்து சென்னைக்கு சென்று நவீன எந்திரம் மூலம் இஸ்திரி செய்யும் முறையை கற்றுக் கொண்டு வந்தேன். இதில் படிப்பு என்பதை பின்னுக்கு தள்ளிவிட்டு தொழில் என்பதை முன்னிலைப்படுத்தி உள்ளேன். ஏராளமானோர் நேரிலும், போனிலும் வாழ்த்து தெரிவித்து வருவது பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story