6 வழிச்சாலை பணிகளுக்காக தலைவர்கள் சிலைகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம் - காவேரிப்பாக்கம் பஸ் நிலையத்தில் பரபரப்பு
நான்கு வழிச்சாலை 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படுவதையொட்டி காவேரிப்பாக்கம் பஸ் நிலையத்திலிருந்த தலைவர்கள் சிலைகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன.
காவேரிப்பாக்கம்,
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா டோல்கேட் பகுதியிலிருந்து காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் டோல்கேட் வரை நான்கு வழி சாலையாக தற்போது உள்ளது. அதிகரித்து வரும் வாகன போக்குவரத்து மற்றும் விபத்துகளை தவிர்க்க இத சாலையை 6 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டன. காஞ்சீபுரம் மாவட்டம் வெள்ளகேட் பகுதியிலிருந்து காவேரிபாக்கத்தை அடுத்த வாலாஜா டோல்கேட் பகுதிவரை சுமார் 37 கீலோ மீட்டர் தொலைவுக்கு ஆறு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
இதனால் சாலையின் ஓரங்களில் இருந்த மரங்கள் மற்றும் முட்புதர்கள், வீடுகள், கடைகள், மின்கம்பங்கள் உள்ளிட்டவை அகற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஆறுவழிச்சாலை பணிகளுக்கு வசதியாக காவேரிப்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்த காந்தி சிலை, எம்.ஜி.ஆர். சிலை, அம்பேத்கர் சிலை ஆகியவை பொக்லைன் மூலம் அகற்றப்பட்டு அருகில் உள்ள சமுதாய கூடத்துக்கு கிரேன் உதவியுடன் தூக்கி செல்லப்பட்டு வைக்கப்பட்டன. மேலும் அரசியல் கட்சிகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட கொடிக்கம்பங்களும் அகற்றப்பட்டன. இதனை ஏராளமானோர் பார்வையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அசம்பாவிதங்களை தவிர்க்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சிலைகளை அகற்றும் பணியின் போது பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன், மற்றும் அதிமுக பேரூராட்சி கழக செயலாளர் ஆர்.வி.என்.மஞ்சுநாதன், காவல் துறையினர், பேரூராட்சி ஊழியர்கள் உட்பட பலர் இருந்தனர்.

Related Tags :
Next Story