வேலூரில் வெவ்வேறு இடங்களில் அரசு பஸ் கண்டக்டர் உள்பட 3 பேர் - தூக்குப்போட்டு தற்கொலை
வேலூரில் வெவ்வேறு இடங்களில் அரசு பஸ் கண்டக்டர் உள்பட 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். அதன் விவரம் வருமாறு.
வேலூர்,
வேலூர் அருகே உள்ள நெல்வாய் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபி (வயது 30). இவர் கிருஷ்ணாபுரம் போக்குவரத்து பணிமனையில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். இவர் மதுபோதைக்கு அடிமையாகி மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரின் மனைவி ஜமுனா வேலூர் தெற்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேண்பாக்கத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (34). இவருக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சதீஷ்குமார் கடன் சுமையால் கஷ்டப்பட்டு வந்ததாக தெரிகிறது. மேலும் உறவினர்களிடம் சொத்தில் பங்கு கேட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரின் மனைவி வேண்டா (31) வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல சத்துவாச்சாரி அலமேலுமங்காபுரம் பெரியதெருவை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மனைவி வரலட்சுமி (26). இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர். வரலட்சுமி கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நேற்று முன்தினம் வரலட்சுமி, தனது கணவரிடம் செல்போனில் பேசி உள்ளார். இந்த நிலையில் வெளியே சென்றிருந்த தியாகராஜன் வீட்டுக்கு வந்தபோது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.
சத்தம்போட்டும் கதவை வரலட்சுமி திறக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தியாகராஜன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் வரலட்சுமி கிடந்தார். இதையடுத்து அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story