சிறுமி பலாத்காரம், மாணவிகள் கடத்தல் வழக்குகளில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சிறுமி பலாத்காரம், மாணவிகள் கடத்தல் வழக்குகளில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாயந்தது.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே முன்னூரான் காடுவெட்டி கிராமத்தில் வசித்து வருபவர் பிச்சைப்பிள்ளை. இவர், 12 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், அனைத்து மகளிர் போலீசாரால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இதேபோல் பெரியவளையம் கிராமத்தை சேர்ந்த வினோத்குமார் என்பவரும் பள்ளி மாணவிகளை கடத்திச் சென்ற வழக்கில் ஜெயங்கொண்டம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
குண்டர் சட்டத்தில்...
இந்நிலையில் பிச்சைப்பிள்ளை, வினோத்குமார் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய, அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில், 2 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் 2 பேரும், ஜெயங்கொண்டம் கிளை சிறையில் இருந்து திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
Related Tags :
Next Story