செட்டிச்சாவடி, கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சிகளில் ரூ.3 கோடியில் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம்
செட்டிச்சாவடி, கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சிகளில் ரூ.3 கோடியில் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தை வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
சேலம்,
ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இதையொட்டி சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில் ரூ.1 கோடியே 58 லட்சம் மதிப்பிலும், செட்டிச்சாவடி ஊராட்சியில் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பிலும் குடிநீர் இணைப்புகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
இதன் அடிக்கல் நாட்டு விழா நடந்தது. மேலும், குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா-பி அன்ட் காலனி சாலை மற்றும் ஜீவாநகர் செல்லும் சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை நடந்தது. இந்த நிகழ்ச்சிகளில் வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமிபூஜை செய்து வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.
கலந்து கொண்டவர்கள்
இதில் சேலம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஏ.வி.ராஜூ, ஒன்றிய கவுன்சிலர் சுசீலா கே.எம்.ராஜா, இளைஞர் பாசறை செயலாளர் பிரவீன், செட்டிச்சாவடி ஊராட்சி தலைவர் அம்பிகா கார்த்திகேயன், கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி தலைவர் சாமிநாதன், துணைத்தலைவர்கள் பரிமளா கோவிந்தராஜ், கேசவன், கொண்டப்பநாயக்கன்பட்டி இலக்கிய அணி ஒன்றிய செயலாளர் என்.சுகுமார், ஓட்டுனர் அணி ஒன்றிய செயலாளர் எஸ்.கலைமணி,
ஊராட்சி கவுன்சிலர்கள் முனியப்பன், சுரேஷ்குமார், அன்பழகன், குணசேகரன் பூபதி, சுந்தரம், பெருமை ஆறுமுகம், பரமேஸ் சொக்கலிங்கம், சரவணன், பிரமாவதி சுசீந்திரன், சுமதி, சாவித்ரி, கலைவாணி, வெங்கடேசன், இளைஞர் இளம் பெண்கள் பாசறை ஒன்றிய செயலாளர் பிரவீன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story