திரவ பிராணவாயு கலன் புதிதாக நிறுவப்பட்டதால் ஒரே நேரத்தில் 700 நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்க முடியும்


திரவ பிராணவாயு கலன் புதிதாக நிறுவப்பட்டதால் ஒரே நேரத்தில் 700 நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்க முடியும்
x
தினத்தந்தி 5 Nov 2020 10:14 AM IST (Updated: 5 Nov 2020 10:14 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அரசு ஆஸ்பத்திரி யில் நோயாளிகளின் பயன்பாட்டுக்காக 35 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ பிராணவாயு கலன் புதிதாக நிறுவப்பட்டதால், ஒரே நேரத்தில் 700 நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்க முடியும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

சேலம், 

கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளி களின் அவசர தேவைகளை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. இந்த நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ஏற்கனவே 13 ஆயிரம் மற்றும் 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ ஆக்சிஜன் சிலிண்டர்கள் அமைக்கப் பட்டு பயன்பாட்டில் உள்ளன. இதன் மூலம் கொரோனா வார்டில் உள்ள 400 படுக்கை களுக்கு ஆக்சிஜன் வழங்கப் பட்டு வருகிறது.

இந்தநிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.1 கோடியே 14 லட்சம் மதிப்பில் 35 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ பிராணவாயு கலன் நிறுவப்பட்டது. இதனை நோயாளிகளின் பயன்பாட்டிற்காக நேற்று காணொலிக் காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

700 நோயாளிகள்

இதன் மூலம் கொரோனா சிகிச்சை பிரிவு, மகப்பேறு, அறுவை, கண் உள்பட சில மருத்துவ சிகிச்சை பிரிவுகளுக்கு ஒரே நேரத்தில் 700 நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்க முடியும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதையொட்டி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ராமன், சக்திவேல் எம்.எல்.ஏ., அரசு ஆஸ்பத்திரி டீன் பாலாஜிநாதன், மருத்துவ கண்காணிப்பாளர் தனபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story