கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மின்வாரிய ஊழியர்கள் வேலை புறக்கணிப்பு போராட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் வேலையை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கள்ளக்குறிச்சி,
தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மின்பகிர்மான வட்டம் தமிழ்நாடு மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கள்ளக்குறிச்சி மேற்பார்வை மின்பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். மின் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சீனிவாசன், பொறியாளர் சங்க செயலாளர் ரங்கசாமி, தொ.மு.ச. செயலாளர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர் ஜெயபிரகாஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
மின் திட்டங்களில் பணியாற்றி வரும் ஊழியர்கள், பொறியாளர்கள் அலுவலர்களின் பதவிகளை ஒழிக்கக் கூடாது, துணை மின் நிலையங்களை பராமரிக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது, பதவி உயர்வுகள், புதிய வேலை வாய்ப்புகளை பறிக்க கூடாது, ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்கவேண்டும், மின் ஊழியர்கள், பொறியாளர்கள், அலுவலர்கள், பகுதி நேர ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் அனைவருக்கும் போனஸ் வழங்கிட வேண்டும், சரண்டர் விடுமுறைக்கான தொகையை வழங்கிட வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்கங்களின் ஐக்கிய சங்க செயலாளர் வெற்றிவேல், மின் தொழிலாளர் சம்மேளன நிர்வாகி முருகேசன், துணை செயலாளர் காமராஜ், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சங்க நிர்வாகி அம்பாயிரம் உள்பட பலர் கலந்துகொண்டனர். சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் செந்தில் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார். முடிவில் மாநில பிரசார செயலாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.
முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் பணியாற்றும் மின்சார அலுவலர்கள், பணியாளர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலையை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். இதனால் மின்சார அலுவலகங்களில் குறைந்த அளவிலேயே பணியாளர்களை காண முடிந்தது. சில அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

Related Tags :
Next Story