வேலூர் மீன்மார்க்கெட் அருகேயுள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கம் - இடநெருக்கடியை குறைக்க நடவடிக்கை
வேலூர் மீன்மார்க்கெட் அருே-யுள்ள தற்காலிக பஸ்நிலையத்தில் இருந்து ஆரணி, திருவண்ணாமலை வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் நேற்று முதல் இயக்கப்பட்டன.
வேலூர்,
மத்திய அரசின் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ.46 கோடியில் வேலூர் புதிய பஸ்நிலையம் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. அதனால் அங்குள்ள தற்காலிக பஸ்நிலையத்தில் இருந்து சென்னை, தாம்பரம், அரக்கோணம், காஞ்சீபுரம், திருத்தணி உள்ளிட்ட பகுதிகளுக்கு மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. வேலூர் பழைய பஸ்நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, குடியாத்தம், கிருஷ்ணகிரி, சேலம், ஓசூர் போன்ற புறநகர் பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள், டவுன் பஸ்கள் மற்றும் மார்த்தாண்டம், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவனந்தபுரம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் விரைவு பஸ்களும் இயக்கப்பட்டன.
டவுன் பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்த பழைய பஸ்நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு ஏராளமான அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்பட்டதால் இடநெருக்கடி மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தவிர்க்கும் வகையில் வேலூர் மீன்மார்க்கெட் அருகே உள்ள லாரிஷெட்டில் தற்காலிக பஸ்நிலையம் அமைத்து திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம் வழியாக செல்லும் அரசு, தனியார் பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அங்கு குடிநீர், கழிப்பறை வசதி, பயணிகள் நிழற்கூடை, நேரக்கண்காணிப்பாளர் அறை, விரைவு பஸ்களுக்கான முன்பதிவு அறை உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.
இந்த நிலையில் தற்காலிக பஸ்நிலையம் நேற்று முதல் செயல்பட தொடங்கியது. ஆரணி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், கும்பகோணம், திருச்சி மற்றும் தென்மாவட்டங்களுக்கு செல்லும் விரைவுபஸ்கள் இங்கிருந்து இயக்கப்பட்டன. தற்காலிக பஸ்நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து பஸ்களும் வேலூர் பழைய பஸ்நிலையம் வழியாக தான் செல்கிறது. அதனால் பெரும்பாலான பயணிகள் பழைய பஸ்நிலையத்தில் இருந்து அந்த பஸ்களில் ஏறி சென்றதை காணமுடிந்தது. முதல்நாளான நேற்று காலை தற்காலிக பஸ்நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது.
திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வேலூருக்கு வரும் பஸ்கள் பழைய பஸ்நிலையம் எதிரே பயணிகளை இறக்கி விட்டு தற்காலிக பஸ்நிலையத்துக்கு செல்கின்றன. தற்காலிக பஸ்நிலையம் இயங்கியதன் காரணமாக வேலூர் பழைய பஸ்நிலையத்தில் நெரிசல் குறைவாக காணப்பட்டது. குடியாத்தம், பேரணாம்பட்டு, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், ஓசூர் மற்றும் டவுன்பஸ்கள் வழக்கம்போல் பழைய பஸ்நிலையத்தில் இருந்துதான் செல்கின்றன என்று போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story