டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் எம்.பில். பாடப்பிரிவில் மாணவர் சேர்க்கை


டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் எம்.பில். பாடப்பிரிவில் மாணவர் சேர்க்கை
x
தினத்தந்தி 6 Nov 2020 4:30 AM IST (Updated: 5 Nov 2020 11:20 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் எம்.பில். பாடப்பிரிவில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் எம்.பில். (உடற்கல்வி) ஒரு வருட பாடப்பிரிவிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் சேருவதற்கு எம்.பி.எட்./ எம்.பி.இ. மற்றும் அதற்கு இணையான பட்ட மேற்படிப்பில் 55 சதவீதத்துக்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

இக்கல்லூரியில் எம்.பில். படிக்க விருப்பம் உள்ளவர்கள் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் tnpesu.edu.in என்ற இணையதளத்தில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியினை தேர்வு செய்து, மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் கல்வி சான்றிதழ்கள் மற்றும் விளையாட்டு சான்றிதழ்களை வருகிற 25-ந்தேதிக்குள் (புதன்கிழமை) பதிவேற்றம் செய்ய வேண்டும்.

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி பற்றிய அனைத்து விவரங்கள், கல்லூரி விதிமுறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள் ஆகியவை www.drsacpe.com என்ற கல்லூரியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

மேலும் விவரங்களுக்கு திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி அலுவலகத்தை 04639-245110, 220590 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று கல்லூரி முதல்வர் சாம்ராஜ் தெரிவித்துள்ளார்.

Next Story