நெல்லையில் பட்டப்பகலில் வீடு புகுந்து திருட முயன்ற இளம்பெண் சிக்கினார் - மற்றொரு பெண் தப்பி ஓட்டம்


நெல்லையில் பட்டப்பகலில் வீடு புகுந்து திருட முயன்ற இளம்பெண் சிக்கினார் - மற்றொரு பெண் தப்பி ஓட்டம்
x
தினத்தந்தி 6 Nov 2020 3:30 AM IST (Updated: 5 Nov 2020 11:36 PM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் பட்டப்பகலில் வீடு புகுந்து திருட முயன்ற இளம்பெண்ணை பொதுமக்கள் மடக்கிப்பிடித்தனர். மற்றொரு பெண் தப்பி ஓடி விட்டார்.

நெல்லை,

நெல்லை வண்ணார்பேட்டை இந்திரா நகரில் உள்ள ஒரு வீட்டை சேர்ந்தவர்கள், வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டனர். இந்த நிலையில் நேற்று காலை அந்த வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 2 பெண்கள் உள்ளே நுழைந்தனர். அங்கிருந்த பொருட்களை திருட முயன்றனர். இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் கூச்சலிட்டனர். உடனே அந்த 2 பெண்களும் தப்பித்தால் போதும் என்று கருதி அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

அப்போது பொதுமக்கள் ஒரு பெண்ணை மடக்கிப்பிடித்தனர். இன்னொருவர் தப்பி ஓடி விட்டார். பிடிபட்ட இளம்பெண்ணுக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணையில், அந்த பெண் பேட்டையை சேர்ந்த 17 வயது உடையவர் என்பது தெரியவந்தது. தப்பி ஓடிய பெண்ணும் அதே பகுதியை சேர்ந்தவர் என்று தெரிந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story