தென்காசியில், அங்கன்வாடி பணியாளர்களுக்கான பயிற்சி முகாமை கலெக்டர் தொடங்கி வைத்தார்


தென்காசியில், அங்கன்வாடி பணியாளர்களுக்கான பயிற்சி முகாமை கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 6 Nov 2020 3:30 AM IST (Updated: 6 Nov 2020 2:01 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சி முகாம் - கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தொடங்கி வைத்தார்.

தென்காசி,

சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகியவை சார்பில் குழந்தைகளிடம் குறைபாடுகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது தொடர்பாக அங்கன்வாடி பணியாளர்களுக்கான பயிற்சி முகாம் தென்காசியில் நடந்தது.

மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தலைமை தாங்கி பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசினார். சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சிவலிங்கம் முன்னிலை வகித்தார். முகாமில் தென்காசி, செங்கோட்டை, கடையம் ஆகிய தாலுகாக்களில் உள்ள 300 அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

முகாமில் டாக்டர்கள் அனிதா பவுலின், ராஜ்குமார், நிர்மல், ராஜலட்சுமி, அறிவுடைநம்பி, சற்குணம் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் குழந்தைகளின் நலன் குறித்து விளக்கி பேசினார்கள். இந்த முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலர் சாந்தி குளோரி எமரால்டு, மாவட்ட வழங்கல் அலுவலர் கோகிலா, கலால் உதவி ஆணையாளர் பிர்தவ்ஸ் பாத்திமா, குழந்தைகள் வளர்ச்சி துறை அலுவலர் ஜெயசூர்யா, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தன்யா, தென்காசி மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி சூப்பிரண்டு டாக்டர் ஜெஸ்லின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story