மனு நூலை தடை செய்யக்கோரி ஊர்வலமாக செல்ல முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 75 பேர் கைது


மனு நூலை தடை செய்யக்கோரி ஊர்வலமாக செல்ல முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 75 பேர் கைது
x
தினத்தந்தி 6 Nov 2020 3:45 AM IST (Updated: 6 Nov 2020 2:45 AM IST)
t-max-icont-min-icon

மனு நூலை தடை செய்யக்கோரி தடையை மீறி ஊர்வலமாக செல்ல முயற்சித்ததால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 75 பேரை போலீசார் கைது செய்து

மாமல்லபுரம், 

மனு நூலில் பெண்களின் நிலை குறித்து குறிப்பிடப்பட்ட விளக்க வாக்கியங்கள் குறித்து பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் மூலம் வழங்கி பரப்புரை செய்வதற்காக மாமல்லபுரம் கங்கை கொண்டான் மண்டபம் அருகே இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாநில தொண்டர் அணி செயலாளர் சிறுத்தை கிட்டு தலைமையில் மாநில தொழிலாளர் அணி செயலாளர் கனல்வழி, மாநில நிர்வாகி செந்தில்குமரன், வக்கீல் உதயகுமார் மற்றும் பலர் பஸ் நிலையம் நோக்கி கருத்து பரப்புரை இயக்கம் என்ற தலைப்பில் மனுநூலை தடை செய்யக்கோரி கோஷமிட்டவாறு ஊர்வலமாக செல்ல முயன்றனர். அவர்களை கிழக்கு ராஜ வீதி அருகே மாமல்லபுரம் போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். 

ஆனால் போலீஸ் தடையை மீறி ஊர்வலமாக செல்ல முயற்சித்ததால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 75 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

திருவள்ளூரை அடுத்த மணவாள நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மனு நூலை விளக்கும் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட துணை செயலாளர் எஸ்.கே. குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகிகள் சீனிவாசன், செங்கதிர் செல்வம், மாநில துணை செயலாளர் அருண் கவுதம், டில்லி மற்றும் பலர் கலந்துகொண்டு மனுநூலை விளக்கும் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.

Next Story