நகைகள் முழுவிவரத்தை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் - இணைஆணையரிடம் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு
நகைகள் முழுவிவரத்தை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று இணை ஆணையரிடம் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு அளித்துள்ளனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் திருவிழா காலங்களில் சாமி-அம்பாளுக்கு அணிவிக்க தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம், பவளம் உள்ளிட்ட 65 வகையான விலை உயர்ந்த ஆபரணங்கள் உள்ளன. இந்த விலை உயர்ந்த நகைகள் அனைத்தும் கோவிலின் 2-ம் பிரகாரத்தில் உள்ள கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. திருவிழா காலங்களில் கோவில் அதிகாரிகள் முன்னிலையில் கருவூலம் திறக்கப்பட்டு நகைகள் ஆனது பாதுகாப்பாக எடுத்து குருக்களிடம் கொடுக்கப்பட்டு சாமி-அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுவது வழக்கம்.
40 ஆண்டுகளுக்கு பிறகு ராமேசுவரம் கோவிலில் கடந்த ஆண்டு அனைத்து நகைகளும் நகை மதிப்பீட்டாளர்கள் மூலம் மறு மதிப்பீடு செய்து ஆய்வு செய்யப்பட்டது. அப்போது கோவிலில் உள்ள நகைகள் தேய்மானம் ஏற்பட்டு எடை குறைந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கோவிலில் பணியாற்றும் குருக்கள் மற்றும் ஓய்வு பெற்ற குருக்கள் உள்ளிட்ட 30 பேருக்கு கோவில் நிர்வாகத்தால் அபராத தொகையுடன் கூடிய விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் உள்ள அனைத்து நகைகளையும் அதன் எடை விவரம் குறித்த முழு விவரங்களையும் வெள்ளை அறிக்கையாக திருக்கோவில் நிர்வாகம் வெளியிட வலியுறுத்தியும், கோவிலில் உள்ள அனைத்து நகைகள் விவரங்களை ஆண்டில் ஒரு நாளாவது பக்தர்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் முருகானந்தம் தலைமையில் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சி.ஆர்.செந்தில்வேல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் இது குறித்த கோரிக்கை அடங்கிய மனுவுடன் திருக்கோவில் அலுவலகத்திற்கு சென்றனர்.
கோவில் அலுவலகத்திற்கு வந்த அவர்கள் இணை ஆணையரிடம் மனு கொடுக்க ஆணையர் அலுவலகம் முன்பு 20 நிமிடத்திற்கு மேலாக மனுவுடன் அமர்ந்து காத்திருந்தனர். அதன்பின்னர் திருக்கோவில் இணை ஆணையர் கல்யாணியிடம் கோரிக்கை அடங்கிய மனுவை கொடுத்தனர். அப்போது இணை ஆணையர் கல்யாணி அவர்களிடம் கூறியதாவது:- ராமேசுவரம் கோவிலில் நகை மறுமதிப்பீடு செய்யப்பட்டதில் நகைகள் தேய்மானம் ஏற்பட்டுள்ளது. இது ஒரு சாதாரண நிகழ்வுதான் தேய்மானம் ஏற்பட்டது குறித்து விளக்கம் கேட்பதற்காகவே பணியாளர்கள் உள்ளிட்ட 30 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இது கோவிலில் நடைபெறும் வழக்கமான நடைமுறைதான். மற்றபடி கோவிலில் எந்த ஒரு நகையும் மாயம் ஆகவில்லை அனைத்து நகைகளும் சரியாக உள்ளன. நகைகளை பக்தர்களின் பார்வைக்கு வைப்பது குறித்து அரசுதான் முடிவு செய்ய வேண்டும். அதை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story