பரமத்திவேலூர் அருகே ராஜாவாய்க்கால் புனரமைப்பு பணிகளை - கலெக்டர் மெகராஜ் ஆய்வு


பரமத்திவேலூர் அருகே ராஜாவாய்க்கால் புனரமைப்பு பணிகளை - கலெக்டர் மெகராஜ் ஆய்வு
x
தினத்தந்தி 6 Nov 2020 9:44 PM IST (Updated: 6 Nov 2020 9:44 PM IST)
t-max-icont-min-icon

பரமத்திவேலூர் அருகே ராஜாவாய்க்கால் புனரமைப்பு பணிகளை கலெக்டர் மெகராஜ் ஆய்வு செய்தார்.

பரமத்திவேலூர்,

பரமத்திவேலூர் அடுத்த ஜேடர்பாளையம் படுகை அணையின் இடதுகரையில் இருந்து ராஜாவாய்க்கால் 33.60 கி.மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ராஜாவாய்க்கால் ரூ.184 கோடி மதிப்பீட்டில் 22 கி.மீட்டர் நீளத்திற்கும், மோகனூர் வட்டம் பொய்யேரி வாய்க்கால்கள் 5 கி.மீட்டர் நீளத்திற்கும் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.

அதன்படி கான்கீரீட் சுவர் கட்டும் பணி, வாய்க்கால்களின் கரைகளை பலப்படுத்து பணி, மதகுகள், மிகுதி நீர் போக்கி மதகுகள் அமைக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ராஜா வாய்க்கால் புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்குதல் பணிகளை விரைந்து முடித்து பாசனத்திற்காக ராஜா வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

அதன் அடிப்படையில் பணிகளை விரைந்து முடித்து விரைவில் தண்ணீர் திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் வினோத்குமார் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

Next Story