அடுத்த ஆண்டு மே மாதத்திற்கு முன்பு 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த முடியாது - மந்திரி வர்ஷா கெய்க்வாட் தகவல்


அடுத்த ஆண்டு மே மாதத்திற்கு முன்பு 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த முடியாது - மந்திரி வர்ஷா கெய்க்வாட் தகவல்
x
தினத்தந்தி 7 Nov 2020 3:45 AM IST (Updated: 7 Nov 2020 4:17 AM IST)
t-max-icont-min-icon

அடுத்த ஆண்டு மே மாதத்திற்கு முன்பு 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த முடியாது என பள்ளி கல்வித்துறை மந்திரி வர்ஷா கெய்க்வாட் அறிவித்து உள்ளார்.

மும்பை,

மராட்டியத்தில் கொரோனா பிரச்சினை காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து மாநில பள்ளி கல்வித்துறை மந்திரி வர்ஷா கெய்க்வாட் கூறியதாவது:-

தற்போது உள்ள கொரோனா சூழல், மேலும் நீண்ட காலம் நீடிக்கும் போல தெரிகிறது. பள்ளி பாடத்தை முடிப்பது பற்றியும், தேர்வுகள் நடத்துவது குறித்தும் நாங்கள் ஆலோசனை நடத்தி வருகிறோம்.

மாநில கல்வி வாரியம் 10, 12-ம் வகுப்புகளுக்கு அடுத்த ஆண்டு மே மாதத்திற்கு முன்பு பொதுத்தேர்வை நடத்த முடியாது. எனவே எந்த அளவுக்கு பாடத்திட்டத்தை குறைக்க முடியும் என ஆலோசனை நடத்தி வருகிறேன். இதன் மூலம் ஆசிரியர்களை மீதமுள்ள வகுப்புகளை முடிக்க வைக்க முடியும். தற்போது உள்ள பாடத்திட்டத்தில் 25 சதவீதத்தை குறைக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story