வைரஸ் தொற்றுக்கு மேலும் 35 பேர் பலி, கர்நாடகத்தில் புதிதாக 2,960 பேருக்கு கொரோனா


வைரஸ் தொற்றுக்கு மேலும் 35 பேர் பலி, கர்நாடகத்தில் புதிதாக 2,960 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 7 Nov 2020 3:30 AM IST (Updated: 7 Nov 2020 4:22 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் புதிதாக 2,960 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக சுகாதாரத்துறை, நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்ததாவது:-

பெங்களூரு, 

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 8 லட்சத்து 38 ஆயிரத்து 929 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று புதிதாக 2,960 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 41 ஆயிரத்து 889 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மேலும் 35 பேர் வைரஸ் தொற்றால் உயிரிழந்தனர். இதனால் கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 347 ஆக உயர்ந்து உள்ளது.

புதிதாக பாகல்கோட்டையில் 25 பேரும், பல்லாரியில் 66 பேரும், பெலகாவியில் 32 பேரும், பெங்களூரு புறநகரில் 69 பேரும், பெங்களூரு நகரில் 1,568 பேரும், பீதரில் ஒருவரும், சாம்ராஜ்நகரில் 18 பேரும், சிக்பள்ளாப்பூரில் 32 பேரும், சிக்கமகளூருவில் 42 பேரும், சித்ரதுர்காவில் 36 பேரும், தட்சிண கன்னடாவில் 79 பேரும், தாவணகெரேயில் 44 பேரும், தார்வாரில் பேரும், கதக்கில் 5 பேரும், ஹாசனில் 97 பேரும், ஹாவேரியில் 6 பேரும், கலபுரகியில் 32 பேரும், குடகில் 28 பேரும், கோலாரில் 48 பேரும், கொப்பலில் 16 பேரும், மண்டியாவில் 119 பேரும், மைசூருவில் 148 பேரும், ராய்ச்சூரில் 17 பேரும், ராமநகரில் 32 பேரும், சிவமொக்காவில் 57 பேரும், துமகூருவில் 161 பேரும், உடுப்பியில் 61 பேரும், உத்தர கன்னடாவில் 17 பேரும், விஜயாப்புராவில் 53 பேரும், யாதகிரியில் 18 பேரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பெங்களூரு நகரில் 12 பேர், மைசூரு, துமகூருவில் 3 பேர், பல்லாரி, தட்சிண கன்னடா, கோலார், கொப்பலில் தலா 2 பேர் உள்பட 35 பேர் வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். நேற்று 2,701 பேர் குணம் அடைந்தனர். இதனால் மாநிலத்தில் குணம் அடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 97 ஆயிரத்து 204 ஆக அதிகரித்துள்ளது. 33 ஆயிரத்து 319 பேர் பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

901 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். நேற்று ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 137 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஒட்டுமொத்தமாக இதுவரை 85 லட்சத்து 14 ஆயிரத்து 653 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

Next Story