தங்கும் விடுதிகளை இணைய தளத்தில் உடனடியாக பதிவு செய்ய வேண்டும் - சுற்றுலாத்துறை உத்தரவு
தேசிய அளவில் அனைத்து தங்கும் விடுதிகளை ஒருங்கிணைக்க தொடங்கப்பட்ட இணைய தளத்தில் உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என்று மாமல்லபுரத்தில் உள்ள விடுதிகள், பண்ணை வீடுகளுக்கு சுற்றுலாத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாமல்லபுரம்,
இந்தியா முழுவதும் முக்கிய சுற்றுலா தலங்களில் உள்ள விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள், பண்ணை வீடுகள் ஆகியவற்றை தேசிய அளவில் ஒருங்கிணைக்கும் வகையில் மத்திய சுற்றுலாத்துறை சார்பில் சாத்தி என்ற என்ற பெயரில் புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் விடுதிகளின் செயல்பாடுகளை முறைபடுத்தவும், விருந்தோம்பல் தொழிலக தேசிய தரவுகள் பதிவிறக்கம் செய்யப்பட உள்ளன.
இந்த புதிய இணையதளத்தில் தேசிய அளவில் இணையும் வகையில் மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து விடுதிகள நட்சத்திர ஓட்டல்கள், பண்ணை வீடுகள் குறித்து முழு விவரத்துடன் பதிவு செய்ய வேண்டும் என்று மாமல்லபுரம் சுற்றுலாத்துறை அனைத்து விடுதிகளுக்கும் கடிதம் வழங்கி அறிவுறுத்தி உள்ளது.
மேலும் இந்த புதிய இணைய தளத்தில் இணையும் வகையில் விண்ணப்ப படிவமும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய இணைய தளத்தில் மாமல்லபுரம் விடுதி நிர்வாகங்கள் தங்கள் விடுதியின் சுற்றளவு, பாதுகாப்பு அம்சம், கண்காணிப்பு கேமரா வசதி, நீச்சல் குளம், அறைகளின் எண்ணிக்கை போன்ற முழு விவரங்களையும் விண்ணப்பத்துடன் அளித்து உடனடியாக இந்த புதிய இணையதளத்தில் இணைய வேண்டும் என்று சுற்றுலாத்துறை அறிவுறுத்தி உள்ளது.
அதேபோல் செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகங்கள் சார்பிலும் இதுகுறித்த அறிவிப்பு கடிதம் விடுதி நிர்வாகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story