முகக்கவசம் அணிகிறார்களா? பஸ்களில் போக்குவரத்து துறையினர் ஆய்வு
பயணிகள் முகக்கவசம் அணிகிறார்களா? என்று போக்குவரத்துத் துறையினர் அரசு மற்றும் தனியார் பஸ்களில் ஆய்வு நடத்தினர்.
புதுச்சேரி,
புதுவையில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் முழுமையாக ஓட தொடங்கியுள்ள நிலையில் அவற்றில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா? பயணிகள் முகக்கவசம் அணிகிறார்களா? பயணிகளுக்கு கிருமி நாசினி வழங்கப்படுகிறதா? என்பது குறித்து போக்குவரத்து துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
புதுவை புதிய பஸ் நிலையம், முத்தியால்பேட்டை மணிக்கூண்டு உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து துறை ஆய்வாளர்கள் சீனுவாசன், தட்சிணாமூர்த்தி மற்றும் அதிகாரிகள் பஸ்களில் ஏறி சோதனை நடத்தினர். அப்போது பஸ்களில் கிருமி நாசினி வைக்கப்பட் டுள்ளதா? அவை பயணிகளுக்கு முறையாக வழங்கப்படுகிறதா? என்று பார்வையிட்டனர்.
பயணிகளில் சிலர் முறையாக முகக்கவசம் அணியாமல் இருந்தனர். அவர்களை மூக்கு மற்றும் வாய்ப்பகுதியை மறைக்கும்படி முகக்கவசம அணிய அறிவுறுத்தினர். மாஸ்க் அணியாமல் இருந்தவர்களை உடனடியாக வாங்கி அதை அணிய செய்தனர்.
பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் கண்டிப்பாக அணிய வேண்டும் என்று அறிவுறுத்தினர். அவ்வாறு அணியாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.
Related Tags :
Next Story