மாணவர்களின் எதிர்காலம் கருதி ஆன்லைன் வகுப்புகளை அரசு ரத்து செய்ய வேண்டும் - காங்கிரஸ் பிரமுகர் வலியுறுத்தல்
மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆன்லைன் வகுப்புகளை உடனடியாக அரசு ரத்து செய்ய வேண்டும் என காங்கிரஸ் பிரமுகர் வலியுறுத்தினார். இது குறித்து மணவெளி தொகுதி வட்டார காங்கிரஸ் செயல் தலைவர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாகூர்,
புதுச்சேரி மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தற்போது ஆன்லைன் வகுப்பு மூலம் பாடம் நடத்தப்படுகிறது. இந்த முறையில் கல்வி பயிலும் மாணவ-மாணவிகள் இணையதளங்களால் மனஉளைச்சலுக்கு ஆளாகி சீர்கெடும் நிலை அதிகரித்து வருகிறது.
ஆன்லைன் மூலம் கல்வி பயிலும் மாணவர்கள், இணையதளத்தில் பல புதிய தேடலை தேடுகிறார்கள். இதனால் பல்வேறு விளையாட்டுகளால் கண் பார்வை பாதிக்கப்பட்டு, உடல் மற்றும் மனரீதியான அழுத்தத்தில் சிக்கி சீரழியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் பெற்றோர்களும் மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள்.
புதுச்சேரி மாநிலத்தில் ஆன்லைன் கல்வி வகுப்புகளால், மாணவர்களுக்கு கிடைக்கும் நன்மைகளை விட, தீமைகளே அதிகம். எனவே மாணவர்களின் எதிர்காலம், பெற்றோர், சமூக நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் கல்வி வகுப்புகளை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story