தூத்துக்குடி வரும் முதல்-அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. பேச்சு


தூத்துக்குடி வரும் முதல்-அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. பேச்சு
x
தினத்தந்தி 7 Nov 2020 7:18 AM IST (Updated: 7 Nov 2020 7:18 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடிக்கு வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்று தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.

தூத்துக்குடி,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 11-ந் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணி மற்றும் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளார். அவருக்கு தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்டக் கழகங்களின் சார்பில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.

இது தொடர்பாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் வைத்து நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் வக்கீல் திருப்பாற்கடல் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்டச் செயலாளர் பி.ஏ.ஆறுமுகநயினார், தூத்துக்குடி தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ஏசாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, தூத்துக்குடி மாவட்டத்துக்கு வருகை தரும் முதல்-அமைச்சருக்கு, வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவுக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்க வேண்டும்.அதற்கான பணிகளை தொடங்கி விட்டோம். நீங்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் வக்கீல் செல்வக்குமார், தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் வக்கீல் வீரபாகு, மாவட்ட சிறுபான்மையினர் நல பிரிவு செயலாளர் கே.ஜெ.பிரபாகர், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் விக்னேஷ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருண் ஜெபக்குமார், ஒன்றியக் செயலாளர்கள் லட்சுமண பெருமாள், ஜவகர், மாவட்ட அரசு வக்கீல்கள் சுகந்தன் ஆதித்தன், கோமதி மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story