தூத்துக்குடி, கோவில்பட்டியில் பா.ஜனதாவினர் திடீர் ஆர்ப்பாட்டம் 320 பேர் கைது


தூத்துக்குடி, கோவில்பட்டியில் பா.ஜனதாவினர் திடீர் ஆர்ப்பாட்டம் 320 பேர் கைது
x
தினத்தந்தி 7 Nov 2020 2:52 AM GMT (Updated: 7 Nov 2020 2:52 AM GMT)

பா.ஜனதாவின் வேல்யாத்திரைக்கு தடை விதித்ததை கண்டித்து நேற்று தூத்துக்குடி, கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்திய அக்கட்சியினர் 320 பேர் கைது செய்யப்பட்னர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் வேல்யாத்திரைக்கு அனுமதி மறுத்த ஆளுங்கட்சியை கண்டித்தும், இந்து மதத்தை இழிவுபடுத்தும் திராவிட கட்சிகளை கண்டித்தும் சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஆர்.கனகராஜ், மாநில ஓ.பி.சி. அணி செயலாளர் விவேகம் ரமேஷ், மாவட்ட பொதுச் செயலாளர்கள் பிரபு, செல்வராஜ், சிவமுருகன் ஆதித்தன், மாவட்ட செயலாளர்கள் ரவிச்சந்திரன், மான்சிங், வீரமணி, மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், பொருளாதார பிரிவு மாவட்ட தலைவர் பொன்குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து உரிய அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதால், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 20 பெண்கள் உள்பட 120 பேரை கைது செய்தனர்.

கோவில்பட்டி பயணிகள் விடுதி முன்பு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமையில் நேற்று காலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மாநில பட்டியல் அணி செயலாளர் நாராயணன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் பாலாஜி, சரவணன், கிருஷ்ணன், கிஷோர் குமார், அஷ்டலட்சுமி மங்கல ரோஸ் ஜோதிலட்சுமி, நகர தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்ட துணைத்தலைவர்கள் குமார், செல்வி, மாவட்டச்செயலாளர் கோமதி, மாவட்ட மகளிர் அணி தலைவி லீலாவதி, மாவட்டச் செயலாளர்கள் சத்தியவாணி, சமுத்திரக்கனி, வேல்ராஜ், மாரியப்பன், செய்தி தொடர்பு மாவட்டத் தலைவர் சீனிவாசன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பா.ஜ.க.வினர் 35 பெண்கள் உள்பட 200 பேரை கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கலைக்கதிரவன் உத்தரவின் பேரில் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் மற்றும் போலீசார் கைது செய்தனர். கைதானவர்கள் தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

Next Story