வேல் யாத்திரையை அனுமதிக்க கோரி பக்தி பாடல் பாடி பா.ஜனதாவினர் நூதன போராட்டம் - சாலைமறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு
வேல்யாத்திரையை அனுமதிக்க கோரி பக்தி பாடல் பாடி கோவையில் பா.ஜனதாவினர் நூதன போராட்டம் நடத்தினர். அவர்கள் சாலைமறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை,
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இருந்து பா.ஜனதா சார்பில் நேற்று காலையில் வேல் யாத்திரை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த யாத்திரை முருகபெருமானின் ஆறுபடை வீடுகள் உள்ள நகரங்கள் வழியாக செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பா.ஜனதாவின் வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை என்று நேற்று முன்தினம் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தடையை மீறி வேல் யாத்திரை தொடங்கப்படும் என்று பா.ஜனதாவினர் அறிவித்தனர். கோவை வி.கே.கே.மேனன் ரோட்டில் உள்ள பா.ஜனதா அலுவலகம் முன்பு நேற்று பா.ஜனதாவினர் குவிந்தனர். பின்னர் அவர்கள் கட்சி அலுவலகத்தில் இருந்து காந்திபுரம் பஸ்நிலையம் வரை வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரினர். ஆனால் போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதனால் கட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து கந்தசஷ்டி உள்பட முருக கடவுளின் பக்தி பாடல்களை பாடி நூதன முறையில் போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் பிரமாண்ட வேல் ஒன்றை கையில் வைத்து நடனமாடினர். இதற்கு மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமை தாங்கினார். முன்னதாக பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டு இருந்தனர்.
இதற்கிடையே திருத்தணியில் நேற்று மதியம் தடையை மீறி வேல் யாத்திரையை தொடங்கிய மாநில தலைவர் எல்.முருகனை போலீசார் கைது செய்தனர். இதனை கண்டித்தும், வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பா.ஜனதாவினர் கட்சி அலுவலகத்தில் இருந்து காந்திபுரம் பஸ்நிலையம் நோக்கி ஊர்வலமாக வந்தனர்.
பின்னர் அவர்கள் கோஷங்களை எழுப்பியவாறு அங்குள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்று இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அதில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே சிறிது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன்காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து போலீசார் எச்சரித்ததால் போராட்டக்காரர்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து போராட்டத்தில் பங்கேற்ற மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் நிருபர்களிடம் கூறும்போது, எதிர்க்கட்சியின் அச்சுறுத்தலுக்கு தமிழக அரசு பணிந்து வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்கவில்லை. திட்டமிட்டபடி தொடங்கிய வேல் யாத்திரை வருகிற 22-ந் தேதி கோவைக்கு வந்தடையும் என்றார். இதில் பொதுச்செயலாளர்கள் ரமேஷ், தாமு, முரளி, மாநில ஊடக பிரிவு செயலாளர் சபரி கிரிஷ், ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவர் சுதாகர், மகளிர் அணி மாவட்ட தலைவி ஜெயதிலகா உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story