ஒரத்தநாடு அருகே, போலி சிலையை வைத்துவிட்டு காசிவிஸ்வநாதர் கோவிலில் உற்சவர் சிலை கொள்ளை -சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை


ஒரத்தநாடு அருகே, போலி சிலையை வைத்துவிட்டு காசிவிஸ்வநாதர் கோவிலில் உற்சவர் சிலை கொள்ளை -சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 7 Nov 2020 9:49 AM IST (Updated: 7 Nov 2020 9:49 AM IST)
t-max-icont-min-icon

ஒரத்தநாடு அருகே காசிவிஸ்வநாதர் கோவிலில் போலி சிலையை வைத்துவிட்டு, உற்சவர் சிலையை கொள்ளையடித்து சென்றது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே முத்தம்பாள்புரத்தில் காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொன்மையான இந்த கோவிலில் உற்சவ மூர்த்தி சிலைகள், கற்சிலைகள் உள்ளன. இந்தநிலையில் கோவிலின் செயல் அலுவலர் சுரேஷ், கோவிலில் உள்ள சிலைகள் எல்லாம் சரியாக இருக்கிறதா? என ஆய்வு செய்தார். அப்போது 24 உற்சவ சிலைகளும், 60 கற்சிலைகளும் இருந்தன.

சொத்து பதிவேட்டின்படி இந்த எண்ணிக்கை சரியாக இருந்தாலும், கோவிலில் ஏற்கனவே எடுக்கப்பட்ட புகைப்படத்தை கொண்டு ஆய்வு செய்தபோது ஒரு சிலையில் மாற்றம் தெரிந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு கோவிலில் வைக்கப்பட்டிருந்த உற்சவ மூர்த்தி சிலைகளில் தொன்மையான காலசம்ஹார மூர்த்தி சிலையை கொள்ளையடித்துவிட்டு, அதற்கு பதிலாக போலி சிலையை வைத்தது தெரியவந்தது. கொள்ளை போன சிலையின் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் என தெரிகிறது.

இது குறித்து செயல் அலுவலர் சுரேஷ், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டுக்கு புகார் அளித்தார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துராஜா நேற்று வழக்குப்பதிவு செய்து, கொள்ளை போன சிலை ஐம்பொன்னால் ஆனதா? அல்லது வேறு உலோகத்தினால் ஆனாதா? எனவும், கொள்ளையடித்து சென்றவர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றார்.

Next Story