பள்ளிபாளையத்தில் பெண் காதலிக்க மறுத்ததால் என்ஜினீயர் தற்கொலை
பள்ளிபாளையத்தில் பெண் காதலிக்க மறுத்ததால் என்ஜினீயர் தற்கொலை செய்துகொண்டார்.
குமாரபாளையம்,
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தோரமங்கலம் காப்பரத்தான்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜராஜன். விசைத்தறி உரிமையாளர். இவருடைய மகன் கோவிந்தன் (வயது 25). சிவில் என்ஜினீயரிங் முடித்துள்ள இவர் சேலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். தற்போது இவர் பள்ளிபாளையத்தில் தங்கி லோகநாதன் என்பவர் புதிதாக கட்டி வரும் பெட்ரோல் விற்பனை நிலையத்தின் கட்டிட பணி மேற்பார்வையாளராக பணியாற்றினார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் கோவிந்தன் பூச்சி மருந்தை குடித்துவிட்டு வாந்தி, மயக்கத்துடன் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ராஜராஜனுக்கு தகவல் வந்தது. இதையடுத்து பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தன் இறந்தார். இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கோவிந்தன் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு அவினாசியில் பணியாற்றியபோது உடன் வேலை செய்த திருச்சியை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்ததாகவும், தற்போது அந்த பெண் காதலிக்க மறுத்ததால் வாழ பிடிக்காமல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. தொடர்ந்து மேல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Tags :
Next Story