காஞ்சீபுரம் மாவட்டத்தில் 30-ந் தேதிக்குள் விவசாயிகள் நெல் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் - கலெக்டர் தகவல்


காஞ்சீபுரம் மாவட்டத்தில் 30-ந் தேதிக்குள் விவசாயிகள் நெல் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 8 Nov 2020 3:45 AM IST (Updated: 7 Nov 2020 11:59 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2020-21-ம் ஆண்டு நடப்பு சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிருக்கு திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் IFFCO TOKIO நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

அரசு வழிகாட்டுதலின்படி மொத்த இழப்பீடு தொகையில் 80 சதவீதம் தமிழக அரசும், 20 சதவீதம் காப்பீடு நிறுவனமும் வழங்க உள்ளன. சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ.451 பிரீமியம் தொகை செலுத்த வேண்டும். சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிர் காப்பீடு செய்ய வருகிற 30-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

எனவே காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீடு செய்ய பொது சேவை மையம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும். கூட்டுறவு வங்கிகளை அணுகி காப்பீடு செய்யலாம். பயிர் காப்பீடு செய்ய தேவையான ஆவணங்களாக ஆதார் அட்டை நகல், கணிப்பொறி சிட்டா, கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் பயிர் சாகுபடி அடங்கல் அல்லது விதைப்பு சான்று, வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் நகல், பயிர் காப்பீடு செய்வதற்கான முன்மொழிவு விண்ணப்பத்துடன் கூடிய பதிவு விண்ணப்பம், காப்பீடு செய்த உடன் விவசாயிகள் தங்களது பயிர் சாகுபடி செய்துள்ள கிராமத்தின் பெயர், சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர், சாகுபடி பரப்பு, வங்கி கணக்கு எண் விவரங்களை உடனடியாக சரி பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.எனவே எதிர்பாராத இயற்கை சீற்றங்களால் ஏற்படும் மகசூல் இழப்பை தவிர்க்க உடனடியாக அனைத்து விவசாயிகளும் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெல் பயிர் காப்பீடு செய்து கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 More update

Next Story