ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது மேலும் 108 பேருக்கு தொற்று


ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது மேலும் 108 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 8 Nov 2020 4:12 AM GMT (Updated: 8 Nov 2020 4:12 AM GMT)

ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டி உள்ளது. நேற்று மேலும் 108 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

ஈரோடு,

தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்து வருகிறது. ஆனால் ஈரோடு மாவட்டத்தில் நோயின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் தினந்தோறும் 80 முதல் 130 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் புதிதாக 108 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 983 ஆக உயர்ந்துள்ளது.

அதே நேரத்தில் நேற்று மாவட்டம் முழுவதும் 108 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர். இதுவரை மொத்தம் 10 ஆயிரத்து 51 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.

133 பேர் இறந்துள்ள நிலையில், தற்போது மாவட்டம் முழுவதும் 799 பேர் கொரோனாவுக்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்ற மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் குறைந்து கொண்டு இருக்கும் நிலையில் ஈரோடு மாவட்டத்தில் வைரசின் தாக்கம் குறையாததால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.


Next Story