ஆத்தூர் பகுதியில் 19¼ கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது
ஆத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 19¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
ஆறுமுகநேரி,
ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவில் சுற்று வட்டார பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆத்தூர் அருகே பழையகாயல் பஜார் பகுதியில் சந்தேகப்படும்படியாக சாக்குப்பையுடன் நின்றவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் அவர், தூத்துக்குடியை அடுத்த புதுக்கோட்டை அருகே கீழ கூட்டுடன்காடு பகுதியைச் சேர்ந்த கணேசன் (வயது 45) என்பதும், சாக்குப்பையில் 19 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்து இருந்ததும் தெரிய வந்தது. எனவே கணேசனை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.2½ லட்சம் ஆகும்.
தொடர்ந்து ஆத்தூர் போலீசார் முக்காணி ரவுண்டானா பகுதியில் ரோந்து சென்றபோது, அங்கு கஞ்சா பொட்டலம் விற்ற ஏரல் சுப்பையா காம்பவுண்டு பகுதியைச் சேர்ந்த சேகர் மகன் சகாயலீனனை (31) கைது செய்தனர். அவரிடம் இருந்த 300 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைதான கணேசன், சகாயலீனன் ஆகிய 2 பேரையும் போலீசார் திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story