நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் மேலும் 71 பேருக்கு கொரோனா


நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் மேலும் 71 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 9 Nov 2020 3:00 AM IST (Updated: 8 Nov 2020 11:02 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் மேலும் 71 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் நேற்று 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நெல்லை மாநகர பகுதியில் 12 பேருக்கும், பாளையங்கோட்டை புறநகர் பகுதியில் 5 பேருக்கும், அம்பை, மானூர், பாப்பாக்குடி, வள்ளியூர், களக்காடு, சேரன்மாதேவி ஆகிய பகுதிகளில் தலா 2 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர்களை பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மாவட்டத்தில் நேற்று 17 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 426 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 13 ஆயிரத்து 970 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 248 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 208 பேர் இறந்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை 7 ஆயிரத்து 891 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 ஆயிரத்து 666 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 70 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 155 பேர் இறந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 33 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 327 ஆக அதிகரித்துள்ளது. இதில் 14 ஆயிரத்து 812 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் வீடுகளில் 382 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 133 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக இறந்துள்ளனர்.

Next Story