மருத்துவ இட ஒதுக்கீட்டுக்கு அனுமதி பெற மத்திய மந்திரியை நேரில் சந்தித்து பேச வேண்டும் - முதல்-அமைச்சருக்கு அன்பழகன் வேண்டுகோள்
அரசு பள்ளி மாணவர் களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு பெற மத்திய மந்திரியை முதல்-அமைச்சர் நேரில் சந்தித்து பேச வேண்டும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுச்சேரி அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி,
புதுச்சேரியில் மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று அ.தி.மு.க. வலியுறுத்தியது. சட்டமன்ற கூட்டத்தொடரிலும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தோம். ஆனால் அதை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளவில்லை. தமிழகத்தில் இந்த சட்டம் நிறைவேறிய பிறகு வேறு வழியின்றி முதல்-அமைச்சர் நாராயணசாமி திடீரென அமைச்சரவையை கூட்டி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவித்தார்.
தற்போது கவர்னர் அந்த கோப்புக்கு ஒப்புதல் அளிக்காமல் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளார். தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டிற்கு கவர்னர் அனுமதி கொடுத்து இருக்கலாம். அதை விடுத்து மத்திய அரசுக்கு இந்த கோப்பை அனுப்பி இருக்க வேண்டியதில்லை. கவர்னரும், முதல்-அமைச்சரும் ஏட்டிக்குப் போட்டியாக செயல்பட்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு கிடைக்காத சூழ்நிலையை உருவாக்கி விட்டனர்.
எனவே நமது முதல்-அமைச்சர் நாராயணசாமி உடனடியாக டெல்லிக்குச் சென்று, அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் கல்வி நலனில் அக்கறை கொண்டு உடனடியாக மத்திய உள்துறை மந்திரியை சந்தித்துப் பேசி வலியுறுத்தி மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக் கான உள்ஒதுக்கீட்டிற்கு அனுமதி பெற்று வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story