அமெரிக்க துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் தேர்வு: சொந்த கிராமத்தில் மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் - கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர்
அமெரிக்க துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து மன்னார்குடி அருகே உள்ள அவரது சொந்த கிராமத்தில் மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேலும் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
மன்னார்குடி,
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் துணை ஜனாதிபதி ஜோபைடன் வெற்றி பெற்றார். துணை ஜனாதிபதியாக கமலாஹாரிஸ்(வயது55) தேர்வு செய்யப்பட்டார். இவரது தாத்தா கோபாலன் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை சேர்ந்தவர். ஆங்கிலேயர் ஆட்சியில் ஸ்டெனோகிராபராக வாழ்க்கையை தொடங்கிய கோபாலன், ஆங்கிலேய அரசில் சிவில் சர்வீஸ் அமைப்பில் பணியாற்றியவர்.
1930-ம் ஆண்டு சாம்பியா நாட்டுக்கு கொடிசியாவில் இருந்து வந்த அகதிகளை கணக்கெடுக்க இந்திய அரசு சார்பில் கோபாலன் அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் அவர் அமெரிக்காவில் குடியேறினார்.
இவரது மகள் சியாமளா கோபாலன் என்பவருக்கு மகளாக பிறந்தவர் கமலாஹாரிஸ். சட்ட படிப்பை முடித்துள்ள இவர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்திலும் பட்டம் பெற்றுள்ளார்.
கடந்த ஆண்டு ட்ரூஸ் வி ஹோல்டு என்ற புத்தகத்தை எழுதியுள்ள கமலாஹாரிஸ் அதில் தனது தாத்தா பி.வி.கோபாலன் குறித்து பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். கடந்த 1991-ம் ஆண்டு தனது தாத்தா கோபாலனுக்கு 80-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்ட போது சென்னை வந்திருந்ததாகவும் அங்கு குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் கூறி உள்ளார்.
கமலா ஹாரிஸ் வெற்றி பெற்ற தகவல் அறிந்த துளசேந்திரபுரம் கிராம மக்கள் அவர், அமெரிக்க துணை ஜனாதிபதியாக பதவியேற்கும் நாளை எதிர்பார்த்து காத்திருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
துளசேந்திரபுரத்தில் உள்ள கமலா ஹாரிஸ் குடும்பத்தின் குல தெய்வமான தர்மசாஸ்தா கோவிலுக்கு கடந்த 2014 -ம் ஆண்டு நடைபெற்ற குடமுழுக்கு விழாவுக்கு கமலா ஹாரிஸ் குடும்பத்தினர் நன்கொடை அளித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் கமலா ஹாரிஸ் வெற்றி பெறவேண்டி வாழ்த்து பதாதைகள் வைத்தனர். தொடர்ந்து தேர்தல் முடிவுகள் வரும் வரையும் தினமும் தர்மசாஸ்தா கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இந்தநிலையில் அவர் வெற்றி பெற்றதை தொடர்ந்து துளசேந்திரபுரம் கிராமம் முழுவதும் கமலா ஹாரிசுக்கு வாழ்த்து தெரிவித்து விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அனைத்து பகுதிகளிலும் மக்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
அப்போது அவர்கள் தீபாவளி பண்டிகை தங்கள் கிராமத்திற்கு முன்பே வந்துவிட்டதாக தெரிவித்தனர்.
கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றதால் துளசேந்திரபுரத்தில் உள்ள அவர்களது குலதெய்வமான தர்மசாஸ்தா கோவிலில் கிராம பொதுமக்கள் நேற்று சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதில் அமைச்சர் காமராஜ், பொதுமக்களுடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
அப்போது அமைச்சர் காமராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:- கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக வெற்றி பெற்றது இந்தியாவிற்கு பெருமை அளித்துள்ளது. . இந்த மண்ணை சேர்ந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரு பெண்மணி அமெரிக்காவின் துணை அதிபராக முதல் முறையாக வெற்றி பெற்று எங்கள் மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார். கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதியாக வெற்றி பெற்றிருப்பது இந்திய மக்களுக்கும், தமிழர்களுக்கும் குறிப்பாக துளசேந்திரபுரம் கிராம மக்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story