புனேயில் குடிபோதையில் பெண்ணை தாக்கி பார்வை இழக்க செய்தவர் கைது


புனேயில் குடிபோதையில் பெண்ணை தாக்கி பார்வை இழக்க செய்தவர் கைது
x
தினத்தந்தி 10 Nov 2020 12:13 AM IST (Updated: 10 Nov 2020 12:13 AM IST)
t-max-icont-min-icon

குடிபோதையில் பெண்ணை தாக்கி பார்வை இழக்க செய்தவர் கைது செய்யப்பட்டார்.

புனே, 

புனே சிரூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த திங்கட்கிழமை இரவு தன் வீட்டின் அருகில் உள்ள மறைவான பகுதிக்கு இயற்கை உபாதை கழிக்க சென்றார். அப்போது அங்கு குடிபோதையில் தள்ளாடியபடி வந்த நபர் அந்த பெண்ணின் அருகில் நின்று சிறுநீர் கழித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் அவரை திட்டி அங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் அந்த பெண்ணை மானபங்கம் செய்ய முயன்றார். இதை அந்த பெண் தடுக்கவே ஆத்திரம் தலைக்கேறிய அந்த நபர் தான் வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் அந்த பெண்ணின் கண்ணில் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதில் படுகாயமடைந்து வலியால் அலறிய பெண்ணை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நடத்திய பரிசோதனையில் அந்த பெண்ணின் பார்வை பறிபோனது தெரியவந்தது.

கைது

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண்ணை தாக்கிய மர்ம நபரை தேடிவந்தனர். மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இதில் சிரூர் பகுதியை சேர்ந்த குண்டலிக் பகாடே(வயது37) என்பவர் தான் குடிபோதையில் பெண்ணை தாக்கி கண்பார்வை இழக்க செய்தார் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை நேற்று கைது செய்தனர்.

Next Story